மொத்தப் பக்கக்காட்சிகள்

தேசப்பற்று

தேசப்பற்றுக்கு மறுப்பெயருதான் தேக(உடல்) பற்று எனப்படும். நம் சமூகம் சிறக்கவும், நலம்பெறவும் அதற்காக உழைக்க நம் தேகமாகிய உடலின்மீது பற்றுதல் கொண்டு நலமாக கவனிக்கவேண்டும். அப்பொழுதுதான் நம் சமுதாயப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு நம் மக்களிடையேயும் நம்மிடையேயும் மகிழ்ச்சியும், சமூக ஒற்றுமையும் ஏற்படுத்தமுடியும்.

அதுப்போல் நம் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் அன்பாகவும், அமைதியாகவும், சகோரத்தன்மையில் சமாதான முறையில் வாழவும், நம் சமுதாயம் வளம் பெறவும், சர்வதேசம் போற்றும் இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நம் இந்திய தேசத்தின் மீது எந்தவித பிரிவினையில்லாமல் பற்றுதல் கொண்டு நம் இயற்கை வளங்களையும் நம் அரசியல் சட்டதிட்டங்களையும் பண்பாடு கலாச்சாரத்தையும் காத்து செயல்படுத்தி நலமாக வாழ வேண்டும் வாழவும் செய்யவேண்டும்.

அப்பொழுதுதான் நம் நாட்டில் குழப்பங்கள் நீங்கி சமுதாயப் பிரச்சனைகள் ஒடுக்கப்பட்டு சர்வதேச நாடுகளில் நம் இந்தியா அன்பு, அமைதி, ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் சமதர்மம் நிறைந்த சமாதான நாடாகவும், சர்வதேச நாடுகளுக்கு நம் இந்தியத்தாய்திருநாடு தலைச்சிறந்த  தாய்நாடகவும் விளங்கும்.

ஆனால் இன்றையநிலையில் நம் நாட்டின்மீது பற்றுதல் கொண்டு நம் நாட்டின் செயல்திட்டங்களை வழி நடத்தி செல்பவர்களும் அதன்படி நடப்பவர்களும் நம் மக்கள் தொகையில் சிலர்தான் பொதுநலத்துடன் வாழ்ந்துக்கொண்டு நம் நாட்டையும் நம் சமுதாயத்தின்  பயன்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்துவருகிறார்கள்

ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்களும் தான் தன்னுடையது என்ற உணர்வுநிலையைவிட்டு நாம், நம்முடையது  என்ற தேசவுணர்வுடன் நம் நாடு, நம் மக்கள் என்ற ஒற்றுமை நிலையில் நம் சமுதாயத்தை நலமுடன் இருக்க செய்தார்கள் என்றால் அந்த நாட்டில் எக்காலத்திலும் தாழ்வுநிலை ஏற்படாதவகையில் அன்பு, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமதர்ம சமாதானநிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

  • தேசபற்றுதலின் நம் இந்தியத் தாய்நாட்டின் நிலை

நம் நாட்டில் இன்றயநிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடன் சுமையுடந்தான் பிறக்கிறது. அதுமட்டுமல்ல நம் அரசியல் சட்டத்திட்டமும் இன்றையநிலையிலிருக்கும் அரசியவாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் அரசு உயர் அதிகாரிகளும் பலர் நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கரையில்லாமல் சிறந்த சட்டத்திட்டங்களை காக்காமலும் பல தேவையற்ற சட்டத்திட்டங்களை உருவாக்கிக்கொண்டும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதினை பொய்யாக்கிக்கொண்டும் நம் நாட்டின் இயற்கை வளங்களை உணர்ந்து பயன்படுத்தாமல் அயல்நாட்டினரின் உதவியை நம்பி வாழ்வதாலும் (நம் நாட்டின் மக்களின் திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பதால்) இன்றைய நம் இளைஞர்கள் பலர் நாடு எப்படி போனால் நமக்கென்ன? என்று நாட்டின்மீது பற்றுதல் இல்லாமல் "கால்போன போக்கில் நாம் போவோம்" என்ற சொல்லிற்கேற்ப வாழ்ந்து விடுகிறார்கள். இதனை சமூக விரோதிகள் நம் இளைஞர்களை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விருப்பம்போல வாழ்ந்து வருகிறார்கள். இதனால்தான் நம் நாட்டில் இனம் புரியாத குழப்பங்களும் தீவிரவாதம் மற்றும் அரசியல் பிரச்சனைகளும் ஜாதி, மத, இனக்கலவரங்களும் ஏற்படுகிறது

நம் தேசத்தின் தந்தை காந்திஜியும், நேதாஜியும், இன்னும் தேசப்பற்றுள்ள பலரும் நாடு எப்படி போனால் என்ன? மக்கள் எப்படி வாழ்ந்தால் என்ன? என்றநிலையில் அவர்கள் பெற்றக் கல்வி திறனுகேற்ப வாழ்ந்திருந்தால் இன்றைய இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும். இதனை சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதனை சாதாரண குடிமகன் தெரிந்துகொள்வதைவிட அரசு (மக்கள்) நிலை உயரதிகாரிகளும், அராசங்க (முதல்) அமைச்சர்களும், மாநில ஆளுநர்களும், வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

தெரிந்து உணர்ந்தவற்றை பொது மக்களிடம் (பொதுகூட்டமைப்பில்) தெரிவித்து மக்களிடையே தேசப்பற்றை உருவாக்கவேண்டும்.

நீதிவழங்குவது மட்டும் நீதிபதிகள் வேலை அல்ல சமுதாயப் பிரச்சனைகளைத் தடுத்து அவ்வப்பொழுது ஒற்றுமையையும், அன்பையும், சகோதரதன்மையையும், சமாதான சமதரமத்தையும், தேச உணர்வையும் ஊட்ட வேண்டும் அப்பொழுதுதான் நீதிபதிகளின் பணிகள் புனிதமாக்கப்படுகிறது.

நாடு நலம் பெறவேண்டுமென்றால் நீதிபதிகளும், அரசு அரசாங்க அமைப்பினரும் மாநில ஆளுநர்களும் தன் கடமைகளை உணர்ந்து பணி செய்யவேண்டும்.

  • தேச உணர்வை நீக்கும் தேசவிரோதிகள்

நம் நாட்டில் கலவரம் ஏற்படுவதற்கு மூலக்காரணத்திற்குரியவர்கள் அரசைப் புரிந்துகொள்ளாமல் செயல்படும் அரசியல்வாதிகளும், ஜாதி, மத, இனத்தன்மையை உணராமல் செயல்படும் சாதிமத அமைப்பினரும், கடவுள் என்றப் பெயரால் செயல்படும் சாமியார்களும், இவற்றிக்குமேலாக கால சூழ்நிலைகளை உணராமல் செயல்படும் நீதிபதிகளும் ஆவார்கள்.

அரசை நிர்வகிப்பதும், நீதி வழங்குவதும் சாதாரணப்பணி அல்ல மிகவும் பொறுப்புவாய்ந்த புனிதப் பணியாகும். அதனால்தான் அரசு, அரசாங்க  மற்றும் நீதி அமைப்பினரையும், கடவுளின் சேவகர்களாக மிகவும் மதிப்புடன் வணங்குகிறேன்.

ஆனால் இன்று உள்நாட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தி தேசத்தை சீரழிக்கும்போது அவர்களை தேச விரோதிகள் என்று இதன்மூலம் குற்றம் சாட்டப்படுகிறது. குற்றம் சாட்டப்படுவதர்கான விளக்கமும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உணர்ந்து அரசு அரசாங்க நீதி அமைப்பும் தேச உணர்வுடன் தன் கடைமைகளை செய்தால் நம் நாடு சிறந்த வல்லரசு நாடாக விளங்கும்.

குறிப்பு 

குற்றம் சாற்றுவது என்வேலையுமில்லை, எனக்கு தகுதியும் கிடையாது. தாங்கள் செய்யும் செயலை உணரவே குற்றம் என்ற வார்த்தையை விவேகத்துடன் குறிப்பிட்டுள்ளேன். நான் சமதர்ம சமாதானத்தை விரும்புகிறவன். நமக்கு நாமே என்ற உணர்வுடன் செயல்பட விரும்புகிறவன்.

  • தேச உணர்வு ஏற்படுதல் 

கீழ்வரும் பகுதியில் நம் நாட்டின்மீது பற்றுதல் எப்படி ஏற்படும் என்பதுப் பற்றியக் கேள்வியும் அதற்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளது அதனை உணர்ந்து நம் இந்தியத் திருநாட்டை அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்த வல்லரசு நாடாக உருவாக்குங்கள், உருவாக்குவோம்.  இதன்மூலம் மற்ற நாடுகளும் நலம் பெறும் அப்பொழுது நம் புவியே அமைதி நிறைந்த பூமியாக {அமைதிப் பூ(ங்கா)மி} அமையும். அதன்மூலம்  உலகில் அமைதி நிறைந்த பேரின்பநிலை ஏற்படும். இதுவே என்னுடைய விருப்பமும். அதனால்தான் அமைதிப் பூ(ங்கா)மி என்றத் தலைப்பில் என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்துள்ளேன்.

கேள்வி விளக்கம் 

  1. நம் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டப் பிறகும் அரசியல்நிளைகளில் அதுவும் சட்டமன்றங்கள், பாராளுமன்றத்தில் கேவலமான சூழ்நிலைகளால் ஏன் பலவித பிரச்சனைகள் ஏற்படவேண்டும்?
  2. அரசியல்வாதிகளும், அரசாங்க அமைச்சர்களும் மக்களுக்கு சேவை செய்வதே குறிக்கோள் என்கிறார்கள். அவர்களுக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்து எப்படி வந்தது?
  3. மக்களாட்சிமுறையில் கூட்டணி ஆட்சி நடைப்பெறும் பொழுது கூட்டணி ஆட்சியில் கருத்து வேற்றுமையால் பிரிவு ஏற்பட்டு கலைக்கப்படுகிறது. பிறகு மீண்டும் ஆட்சி அமைக்க தேர்தலுக்கு எவ்வளவு செலவாகிறது. இந்த செலவைஈடுக்கட்ட அதிக வரி வசூல் செய்யும்பொழுது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெரும்பாலான மக்கள் மேலும் அதிக வறுமையை சந்திக்கவேண்டிய சூழ்நிலையில்தான் வாழ்கிறார்கள். இதுதான் அரசியல்வாதிகளும், அரசாங்க அமைச்சர்களும் மக்களுக்கு செய்யும் சேவையா? இந்த செயல்பாடுதான் தேச ஒற்றுமையை உருவாக்குமா? இவர்களால் வறுமை ஏற்படும்பொழுது நம் நாடு எப்படி வல்லரசு நாடாக உருவாகும்?
  4. மக்களுக்கு பொது சேவை செய்யும்பொழுது அரசியவாதிகள் அரசு அதிகாரிகள் அரசாங்க (முதல்) அமைச்சர்கள் ஏன் ஊழல் வேண்டும்? அதன்பிறகு ஏன் விசாரணைக்குழு அமைக்கவேண்டும்? இவர்கள்தான் நாட்டின்மீதும் மக்களின்மீதும் பற்றுதல் உள்ளவர்களா? இவர்களால் நம் நாடு எப்படி வல்லரசு நாடாகும்? அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் செய்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்பொழுது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதினை பொய்யாக்கி தீர்ப்பு வழங்கப்படுகிறோம். இதில் யார் குற்றவாளி? பொதுமக்களுக்கு சேவை செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள் குற்றவாளியா? இவர்களை விடுதலை செய்யும்பொழுது காவல்துறையினர் குற்றவாளியா? குற்றவாளி யார்? இந்த செயல் மனித இனத்திற்கு ஒவ்வாத மிருக செயலைவிட மோசமான நடவடிக்கையாகும். இதனால் பொருளாதார முன்னேற்றம் அமைதி, ஒற்றுமை எப்படி ஏற்படும்.
  5. மக்களுக்கு சேவை செய்வதற்கு (நன்மைகள்) அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் மிருகத்தைவிட மோசமான போட்டி, பொறாமை நிலையில் நம் நாட்டை சீரழித்து வருகிறார்கள். இதுதான் தேசப்பற்றுதலை உருவாக்குமா?

நதிநீர் பிரச்சனை (குடிநீர்)

"நீர் இன்றி அமையாது உலகு" என்பது நம் முன்னோர்கள் வாக்கு நம் புவியில் நீர் இல்லை என்றால் எந்த ஒரு ஜீவனின் பரிணாமத்திலும் வளர்ச்சி ஏற்படாது. நீர் அனைத்து ஜீவன்களுக்கும் பொதுவான பிறப்பிடமாகும் நீரின் செயல்பாட்டில் தடை ஏற்பட்டால் சமுதயாத்தில் சீரழிவு ஏற்படும்.

நம் உடல் இயக்கத்திற்கு இரத்தம் (நீர்) அவசியமாக தேவையான ஒன்றாகும். நம் உடல் இயக்கத்திற்கு, வயதிற்கேற்றவகையில் இரத்தம் உற்பத்தி அவ்வப்பொழுது அதிகரிக்கவேண்டும். இந்த இரத்த ஓட்டத்தில் குறைவு ஏற்பட்டால் நம் உடலின் செயல்பாட்டில் மந்தநிலை ஏற்படும். நம் உடலில் உற்பத்தியாகும் இரத்தம் உடலுறுப்புகளுக்கு போவதில் தடை செய்தால் அதன் உறுப்புகள் செயலிழந்துவிடும் இதனால் உடலின் செயல்பாட்டில் சீரழிவு ஏற்படும். இதுபோன்றுதான நதிநீர்ப் பிரச்சனையும்.

நீதிபதிகள், அரசாங்க அமைப்பினர், குடியரசுத்தலைவர் கவனத்திற்கு 

கிராமங்கள், வட்டங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒட்டுமொத்த கூடமைப்பாகத்தான் இந்தியநாடு என்று சிறப்புபெற்று செயல்படுகிறது. இதில் "ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மற்றொரு கண்ணில் வெண்ணெய்" என்ற நிலையில் செயல்பட்டால் இந்தியா அமைதியை இழக்க நேரிடும். அதனால் ஒற்றுமைக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நதிநீர்ப் பிரச்சனையை சிறந்த முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
  1. இதுகுறித்து தீர்வான முடிவு எடுக்காமல் ஏன் காலம் தாழ்த்தி வரவேண்டும்?
  2. இதுதான் வேளாண்மைத் துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் செயலா? 
  3. விவசாயிகளின் வறுமையை போக்கி அனைவருக்கும் உணவு கிடைக்க வழிவகை செய்யும் செயலா?
  4. இதுபோன்ற மந்த நிலைதான் தேச ஒற்றுமையை உருவாக்குமா?
அணைத்து நதிகளையும் தேசியமயமாக்கப்பட்டு பராமரிக்கவேண்டும்.

அனைத்து மக்கள் கவனத்திற்கு

நம் புவி அமைப்பில் முக்கால் பகுதி நீரினால் சூழப்பட்டாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணத்தை ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்கவேண்டும். அதனால் நீர்ப்பற்றாகுறையை தவிர்ப்பதற்கு கீழ்கண்டவாறு செயல்படுத்தவேண்டும்.
  1. அணு ஆய்த சோதனை மற்றும் அணு ஆய்தப்போரை தவிர்க்கவேண்டும்.
  2. இயற்கைவளங்களை பராமரிக்கும் வகையில் காடுகளையும் மூலிகை வகை மரங்கள், செடிகொடிகளை வளர்க்கவேண்டும்.
  3. போக்குவரத்து வாகனங்களின் புகையை அடிக்கடி சோதனை செய்து காற்றுநிலைகளை  சுத்தப்படுத்தவேண்டும்.
  4. மழைநீரை கடலுக்கு அனுப்பாமல் குளம் குட்டைகள், ஏரிகளில் நிரப்பவேண்டும்.
  5. கழிநீர்க்கென்று தனி அமைப்பை ஏற்படுத்தவேண்டும்.
  6. உணவு உற்பத்தி நிலங்களில் இயற்கை உரங்கள் (தழைச்சத்து, கால்நடைகளின் கழிவுப்பொருள்கள்) இட்டு பயிர்செய்தால் மண்ணின்தன்மை காக்கப்பட்டு மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

  • குற்றவாளிகள் உருவாக்கம் 

குற்றம் செய்வதென்பது மனித இயல்பு குற்றம் செய்யாமல் நெறிமுறையுடன் வாழச் செய்வது சமூகத்தின் சான்றோரின் உரிமை. குற்றம் செய்யாமல் தடுத்து உரிமைக்காப்பது அரசு மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசும், அரசாங்கமே குற்றவாளிகளை உருவாக்குகிறது. அதன்பிறகு குற்றவாளிகளை பிடிக்க பொருளாதார நிலையில் செலவு அதிகரிக்கப்படுகிறது. இதன் நோக்கம்மென்ன? இது தேவைதானா? இதனால் நாட்டிற்கு என்ன இலாபம்? குற்றவாளிகளை அதிகரித்து பொருளாதாரத்தில் தாழ்வுநிலையை ஏற்படுத்துவதுதான் நாட்டின்மீது உள்ள பற்றுதலா?

  • மனித உரிமைகளையும் கட்டுப்படுத்துதலும்

மனிதன் என்பவன் யார்? அவன் உரிமைகள் என்னன்ன? என்பதினை முதலில் வரையறை செய்துக்கொள்ளவேண்டும். இதனை வரையறை செய்யாமல் அரசு, அரசாங்கம் மற்றும் மனித உரிமை ஆணையம் செயல்படுவதால்தான் நம் நாட்டில் பலவகைப் பிரச்சனைகள் மனிதர்களால் அதிகரிக்கிறது.

மனிதன் என்றால் என்ன? மனிதன் என்பது மற்ற ஜீவன்களின் மீது அன்பு செலுத்தி தன் நிலையை சரிசெய்துகொள் என்பது பொருளாகும். அதனால்தான் மற்ற ஜீவன்களை காத்து பராமரித்து பகுத்தறிவுடன் அதாவது இறையுணர்வுடன் தன்னிலையை உயர்த்திக்கொள்ளும் மனப்பாங்குடைய மனம் உள்ள பிறப்பே மனிதன் பிறப்பாகும், மனிதனாவான்.

இன்றைய நம் சமூகநிலையில் மனித உரிமைக்காக தன் கடமைகளை மறந்து மனித என்ற சொல்லிற்கே அர்த்தமில்லாமல் வாழ்ந்துகொண்டு நம் சமுதாயத்தையே சீரழித்துக்கொண்டிருக்கிறோம்.

  • மனிதர்கள் போராட்டம் 

தற்பொழுது ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் மனிதன் என்ற தன்மையை இழந்து வன்முறை உருவாகும் அளவிற்கு போராட்டாம் செய்கிறார்கள் இதன் விளைவால் என்ன பலன் ஏற்படும்?

  • அரசு ஊழியர்கள் போராட்டம் 

அரசு ஊழியர்கள் நம் நாடு நம் அரசு (மக்கள்) என்ற தேச உணர்வுடன் செயல்பட்டால் எந்தவித போராட்டம் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படாது. இன்றைய நிலையில் அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி  சிறப்பு வாய்ந்த நிலையில் அவர்களுடைய பணி நம் நாட்டிற்கு தேவைப்படுகிறது. அதனால் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்யாதளவிற்கு சிறந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு ஊழியர்கள், அரசாங்க அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்கள்  முதல் வயிற்றுப் பிழைப்பிற்காக வழியில்லாமல் வாழும் சாமானியன் வரை நம் நாடு நம் மக்கள் நாம் அனைவரும் இதியன் என்ற ஒற்றுமை உணர்வுடன் தன்  உரிமைகளை நிலைநாட்ட தன் கடமையை உணர்ந்து செயல்பட்டால் நம் நாடு சர்வதேச நாடுகளில் ஒற்றுமை நிறைந்த வல்லரசு நாடக திகழும்.

  • போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், மற்றும் கடையடைப்பு

பொருளாதார முன்னேற்றத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் போக்குவரத்துப் பணி சிறப்புப் பெற்றதாகும். போக்குவரத்துநிலையில் தடை ஏற்பட்டால் தேச உணர்வும் பொருளாதார முன்னேற்றமும் பாதிக்கப்படும். தேச உணர்வும் பொருளாதார முன்னேற்றத்திலும் தடை ஏற்பட்டால் அரசாங்க அமைச்சர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், மாநில ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் நீதிபதிகளுக்கும், எந்தவித பாதிப்பும் கிடையாது. சுகபோக வாழ்க்கையில் வாழ்பார்கள். ஆனால் பாதிப்பதெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக உழைக்கும் மக்களும் தினக்கூலி தொழிலார்களும் ஆவார்கள்.  நம்மை நாமே காத்துக்கொள்ள தேவையற்ற முறையில் போராட்டம் செய்வதை விட்டுவிட்டு தேச உணர்வுடன் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாடுப்படுவோம்.

  • உரிமையை தவறாகப் பயன்படுத்துதல்

நம் அரசியல் சட்டத்தில் ஒற்றுமைவுணர்வுடன் அன்பாகவும், அமைதியாக சமதர்மசமாதான முறையில் வாழவேண்டியே அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் தவறாகப் பயன்படுத்தி இந்திய நாட்டின் நிர்வாகத்தையே சீரழிக்கிறோம். இதனை கட்டுப்படுத்தப்படவேண்டிய நீதித்துறையினரும் உதவுகின்றனர்.

வழிப்பாட்டு உரிமைகள்
மனித வாழ்க்கையை மேம்படுத்தவே வழிப்பாட்டு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. வழிப்படுகள் மதங்களின் அடிப்படையிலேயே நடைப்பெறுகிறது. இதில் எந்தவித மதங்களும், மொழிகளும் உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை அரசியல் கட்சிகள் எப்படியோ அப்படிதான் மதங்களும் செயல்படுகின்றன.ஆனால் வழிப்பாட்டு உரிமைகளை தவறாகப் பயன்படுத்தி இந்திய மக்களின் அறிவுத்திறனை அழித்துகொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் எந்த நிலையில் மேன்மையடைய முடியும்? நாடு முன்னேறவேண்டுமென்றால் அவரவர்களின் மதக்கோட்பாடுகளை பின்பற்றி வாழவேண்டும்

ஒரு நாடு வல்லரசு ஆகவேண்டுமென்றால் அந்நாட்டு மக்கள் நோய், நொடி இல்லாமல் ஆக்கப்பூர்வமான அறிவுத்திறனுடன் செயல்படவேண்டும்.

இன்றய நிலையில் மனித உரிமைகளை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு சாதி, மதத்திற்கொரு கட்சியும், சங்கமும், தொண்டு நிறுவனங்களும் அமைத்துக்கொண்டு நம் நாட்டின் ஒற்றுமையையும் தேச உணர்வையும்,பொருளாதார வளர்ச்சியையும், முன்னேற்றத்தையே சீரழித்துவருகிறோம். இது நாட்டிற்கே ஆபத்தான செயலாகும்.

அதனால் சமுதாயத்தை சீரழிக்கும் எந்த ஒரு சாதி, மதத்தின் பெயரிலும் அடிப்படையிலும் எந்த ஒரு கட்சியும், சங்கமும், தொண்டு நிறுவனங்களும் அமைக்க அனுமதிக்ககூடாது. சமூக விரோத செயலை செய்யும் எந்த ஒரு அமைப்பையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்.  இதனை தடை செய்யாமல் அனுமதித்தால் நம் நாடு என்றைக்கும் கலவரம் நிறைந்த ஏழை நாடாகவே இருக்கும்.

இயற்கை அளித்துள்ள சுதந்திரதையும், உரிமையையும், கடமையையும் தவறாகப் பயன்படுத்துபவர்கள் (மனிதர்கள் அல்ல)மனிதப் பிறவிகள் அல்ல.

  • கல்வி மேம்பாடு

நம் நாட்டில் அன்பு, அமைதி, தேசஒற்றுமை, மகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட கல்வி அமைப்பு ஒழுங்கு முறையாக செயல்படவேண்டும்.

இன்றைய நிலையில் நம் நாட்டின் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள், ஆசிரியர் பணிகள் பெற்றோர்களுக்கு சமமானப் புனிதமானப் பணியாகும்.ஆனால் இன்றைய நிலையில் இருக்கும் பல ஆசிரியர்கள் சுயநலத்துடன் அரசிடம் பல சலுகைகளைப் பெற்று சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர்.  இந்நிலையில் அவர்களால் எப்படி மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கமுடியும்? அன்பபையும், அமைதியையும், தேச உணர்வையும் ஒற்றுமையையும் எப்படி ஏற்படுத்தமுடியும்

அதனால் ஆசியர்கள் தேச உணர்வுடன் பணிசெய்யவேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் பணி ஓய்வுப் பெற்றபிறகும் தொடர்ந்து கல்விப் பணியை செய்து வருகிறார்கள். மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கவேண்டும். பரிசுகள் அளிப்பது நன்மைகள் உருவாகவேண்டிதான்.

கல்வி அமைப்பில் போராட்டம் (வேலை நிறுத்தம்) ஏற்பட்டால் இந்திய நிர்வாகம் பாதிக்கப்படும். அதனால் கல்வித்துறையில் போராட்டம் உருவாகதளவிற்கு நமது அரசாங்கம் செயல்படவேண்டும்.

தேச ஒற்றுமையும், உணர்வையும் ஏற்படுத்துமிடந்தான் கல்விகூடமாகும். கல்விகூடங்களில் போதிக்கப்படும், நல்ல சிறந்த பழக்க வழக்கங்களின் அடிப்படையில்தான் அந்நாட்டின் நிலை அமையும்

காவல் அமைப்பு 

தேச ஒற்றுமை, உணர்வை உருவாக்குவதிலும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தி சட்டத்திட்டங்களை காப்பதிலும் முதலிடம் பெறுவது காவல்ப்பணியாகும். சுதந்திரதிகுப் பிறகு காவல்ப்பணி சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் "அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள்" காவல்த்துறையினர் என்று பொதுமக்கள் கூறுகின்றளவிற்கு காவல் பணிகள் செயல்பட்டுகொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரசியல்வாதிகள், மற்றும் அரசாங்க அமைச்சர்களின் தவறான குறுக்கீடினால் சட்டதிட்டங்களை காக்க கடுமையான அடக்குமுறையை கையாளவேண்டி வருவதால் பொதுமக்கள் காவல்த்துறையினரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்த்து காவல்துறையினர்க்கும் பொதுமக்களுக்கும் அன்பு பாலமாக நீதி அமைப்பு விளங்கவேண்டும்.

  • காவல் பணியாளர்களின் சீருடையில் மாற்றம்

இன்று காவல்துறை பணியாளர்க்கும் அலுவலக வாயிற்காவலர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் வெளிப்படையாக தெரியாமல் சீருடை அணிந்துள்ளார்கள். இது காவல்துறையினரை கீழ்நிலைக்குக்கொண்டு செல்லும் செயலாகும். காவல்துறையினர் மதிப்பாக செயல்படவும், காவல்துறையினர் என்று தனியாக அடையாளம் கண்டுக்கொள்ளவும், காவல்துறையில் சீருடையில் சிறிது மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.

காவல் பணிகளில் இளைஞர்கள் பங்கு
நம் நாட்டின் சட்ட ஒழுங்கை காத்து மக்களிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, தேச உணர்வை ஏற்படுத்துவதில் இன்றைய இளைஞர்கள் பெரிதும் முயற்சியை மேற்கொண்டு காவல் பணியில் சேர்கின்றனர். அவர்களுக்கு சிறந்த பயிற்சியும், ஊக்கமும் அளிக்கவேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல சிறுகுற்றம் நாளை பெருங்குற்றமாக மாறி நம் சட்ட ஒழுங்கை சீரழிக்கும். அதனால் காவல்துறையினர் சிறுகுற்றமாக இருந்தாலும் அலட்சியப்போக்குடன் எண்ணாமல் ஆரம்பநிலையிலேயே தடுக்கவேண்டும்.

சமூக விரோதிகளிடம் கடுமையாக நடந்துக்கொண்டாலும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அன்பாக நடந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும்.

  • சுதந்திரம் பெற்ற பாரதம் (பாரதமா?)

அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி போன்ற நிலைகளில் வாழும் வாழ்க்கைத்தான் சுதந்திரம் பெற்ற வாழ்க்கையாகும். நம் இந்தியத் தாய்த்திருநாட்டில் நம் உரிமையையும், கடமையையும் சுதந்திரமாக செயல்படுத்ததான் முடிகிறதா? நம் நாட்டில் அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சிதான் இருக்கிறதா? சிறிது சிந்தித்துப்பாருங்கள். சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்து தனது உரிமையை நிலைநாட்ட ஒவ்வொரு இந்திய குடிநபர்க்கும் முழுச்சுதந்திரம் உள்ளதா? ஆனால் இன்றைய நிலையில் உரிமையையும், சுதந்திரத்தையும் பறிக்கும் அளவிற்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இவை சுதந்திரம் பெற்றதற்கு அழகல்ல.

வாக்களிப்பதற்கும், வழிப்பாடு செய்வதற்கும், பயணம் செய்வதற்கும் அதிக பாதுக்காப்பு  அளிக்கும் அளவிற்கும் நம்  நாடு கலவரம் நிறைந்த நாடா? அல்லது நம் நாட்டு மக்கள்தான் தீவிரவாதிகளா? இதுதான் சுதந்திரம் பெற்ற நாடா?

ஒரு நாடு சுதந்திரமாக செயல்பட (அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி, நிறைந்த நாடாக செயல்பட) அனைவருக்கும் சாதிமத சார்பற்ற பொதுவான கல்வியை தேச உணர்வுடன் போதிக்கவேண்டும்.

சட்டஒழுங்கு மதிக்கப்பட்டு காக்கப்படவேண்டும் என்றால் காவல்துறை நவீனப் படுத்தவேண்டும். காவல்துறை நவீனப்படுத்துதல் என்பது காவல்துறைக்கு வசதியும் செய்துகொடுத்து உண்மையாக நேர்மையாக பொதுமக்களுக்கு அன்பு பாலமாகப் பணிப்புரியவேண்டும் இதுதான் நவீனப்படுத்துதல் என்பதாகும். இதனைவிட்டுவிட்டு புதியதாக காவல் நிலையங்கள் அமைப்பதும், வரம்புக்குமீறிய அளவில் காவலரை தேர்ந்தெடுப்பதும் சட்டஒழுங்கை சீர்க்கெடுப்பதற்கு சமமாகும். இதனால் குற்றங்கள்தான் அதிகரிக்கும்.

கல்வி அமைப்பினை ஒழுங்குப்படுத்தி மாணாக்கர்களின் பகுத்தறிவுத்திறனை வளர்த்தால் குற்றங்கள் வெகுவாக குறைக்கப்படும். 

  • எல்லைப் பிரச்சனைகளின் தீர்வு 

பா + ரதம் என்றால் பரந்து விரிந்த உலகில் ரதமாக இயங்கும் பூமி என்றுப் பெயராகும். இந்த பரந்த விரிந்த பூமியை நிர்வகிக்க ஓர் இடமாகவும் சிறந்தநாடாக விளங்கியதுதான் நம் பாரதநாடாகும். இந்திய பாரதநாடுதான் இன்றய நிலையில் குறுகிய எல்லைப்பரப்பைக் கொண்டு இந்தியா என்று அழைக்கப்படுகிறது.

பாரதநாடு பழம்பெரும்நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவைகற்றாதீர் - பாரதியார்.

நம் பூமியாகிய பாரதநாடு (இந்தியா) நாளடைவில் மனிதர்களுடைய தீய பொய்யான எண்ணங்களால் (அதர்மநிலையில்) பலப்  பிரிவினைகளாகப் பிரிக்கப்பட்டன. அந்த பிரிவினைகளால் உருவானவைகள்தான் இன்றைய நிலையில் பல இடங்களை (நாடுகளை) தன் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டுமென்று திட்டம் தீட்டிவரும் நாடுகளாகும்.

நம் புவி அமைப்பில் அனைத்துநாடுகளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தாயாக இருப்பது இன்றைய நிலையில் இருக்கும் நம் இந்தியத் தாய்திருநாடுதான் என்றுத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறேன். ஆனால் நாமோ நம் தாய்நாட்டை கூறுப்போடும் அதாவது பலப் பிரிவினைகள் ஏற்படுத்தும் அளவிற்கு சட்டதிட்டங்களை அமைத்துவருகிறோம். தவறான அரசியல் நிர்வாகத்தால் இதன்நிலை நீடித்தால் நம் இந்திய தாய்த்திருநாடு என்றப் பெயரே இல்லாமல் போய்விடும்.

அதனால் நாடு, மற்றும், மாநிலம், மாவட்டம் என்ற நிலைகளில் பிரிவினைகள் (கலவரம்) ஏற்படுத்தும் எந்த செயல்களையும் கவனமாக கையாளவேண்டும். தேவையற்றப் பிரிவினியாகலித் தடுக்கவேண்டும். இதனால் தேச ஒற்றுமை ஏற்படும் சர்வதேச மனித சமுதாயமும் நலம் பெறும்.

  • அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் கருத்துநிலை

நம் நாடு முற்காலத்தில் ஞானம், விஞ்ஞானம் நிலைகளிலும், உற்பத்தி மற்றும் பொருளாதார துறைகளிலும் முன்னோடியாக விளங்கிய நாடு. ஆனால் இன்று வளர்ச்சி அடைந்துக்கொண்டிருக்கிறது. இந்தவளர்ச்சியிலும் அவ்வப்பொழுது தடை ஏற்படுகிறது. இதற்கு காரணம் அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் என்று தவறான எண்ணத்துடன் வாழுபவர்கள் மக்கள் வாழ்க்கையின் உண்மைநிலைத் தெரியாமல் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு தேசத்தின்மீதும் சமூகத்தின்மீதும் உண்மையான பற்றுதல் இல்லாமல் வாழ்வதால்தான் நம் நாடு குழப்பங்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகிறது. இதற்கான தீர்வு என்ன? சற்று சிந்தித்திப் பாருங்கள்.

  • நாடக மற்றும் திரைப்படத்துறையினரின் பங்கு 

நம் மக்களிடையே, அன்பு, அமைதி, ஒற்றுமை, தேச உணர்வு, மகிழ்ச்சி, வாழ்க்கை முன்னேற்றம், சமூகம், பண்பாடு, நாகரீகம் வளர்ச்சி ஏற்படுத்துவதில் திரைப்படத்துறையினர் முக்கிய பங்கு வகுக்கின்றனர். ஆனால் இன்று வன்மம் நிறைந்த நிலையில் சமூகத்தையும் பண்பாடு, நாகரிகத்தையும் சீரழிக்கும் நிலையில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றனர். நாட்டின் மீதும் சமூகத்தின்மீதும் அக்கறையிருந்தால். மக்களிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய நிலையில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெளியிடுங்கள்.

கிராம முன்னேற்றமும் தேச உணர்வும்
நாடு முன்னேற்றம் அடைவதும், வல்லரசு நாடாக உருவாகுவதும் ஒவ்வொரு கிராம முன்னேற்றத்தில்தான் அடங்கியுள்ளது. அதானால் நம் நாடு சிறப்பு பெற எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கிராம முன்னேற்ற வளர்ச்சித் திட்டங்களை முறையாக கையாண்டு இளைஞர்கள் மனதில் தேச உணர்வையும் நாட்டின் முன்னேற்ற உணர்வையும் உயர்த்தவேண்டும்.

இளைஞர்கள் தவறு செய்வதென்பது இயல்பு அதனால்தான் கொள்ளை, கொலை, விபச்சாரம், கள்ளச்சந்தை, போன்றக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. நகரத்தில் வாழும் இளைஞர்கள் எளிதாக தவறு செய்ய வாய்ப்புண்டு, ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் மற்றும் இளைஞர்கள் தவறுசெய்வதென்பது முடியாத ஒன்றாகும். காரணம் அவர்களிடையே நெருங்கிய பந்தபாச உறவுகளும் அன்பு கலந்த மறியாதையையும் வாழையடி வாழையாக பின்பற்றி வருவதால் பெரும்பாலான மக்கள் மற்றும் இளைஞர்கள் தவறு செய்யாமல் ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில் கிராம வாழ்க்கை தவறான பாதையை நோக்கி செல்கின்றன. இதற்கு காரணம் தவறான முறையில் செயல்படும் அரசியலும், கடமை உணர்வை அலட்சியப்படுத்தி பணிப்புரியும் அரசு ஊழியர்களும் ஆவார்கள். இதனால் கிராம மக்களிடையே வறுமை ஏற்பட்டு தவறான வாழ்கையை வாழ முற்படுகின்றனர். இதனை உடனடியாக தடுத்து கிராம வளர்ச்சித் திட்டங்களை முறையாக செயல்படுத்தி நம் நாட்டை அமைதி, ஒற்றுமை நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும். உருவாக்குவோம்.

ஒவ்வொரு இளைஞரும் நம் நாடு நம் மக்கள் என்றும், மனித நேயத்துடன் செயல்பட்டான் என்றால் நம் நாடு அனைத்து துறைகளும் மேன்மைப்பெற்ற நாடாக விலங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக