மொத்தப் பக்கக்காட்சிகள்

நீதித் (காவல்) துறை நிர்வாகம்

முன்னுரை:

வணக்கம் நம் சமுதாய மேம்படவும் மக்களிடையே குற்ற உணர்வை உணர்த்தி அன்பு, அமைதி, ஒற்றுமை, தேச உணர்வையும் ஏற்படுத்தி நீதி மற்றும் காவல் துறை சிறப்பாக செயல்படவேண்டி சில கருத்துகளை பதிவு செய்துள்ளேன்.

பனை மரத்தின் கீழ் உட்கார்ந்து பால் குடித்தாலும் பார்ப்பவர் பலர்க்கு தவறாக தோன்றுமாம். அதுபோல இங்கு குறிப்பிட்டுள்ள கருத்துகள் குற்றமாக இருந்தாலும் குற்ற உணர்வை திருத்தி சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ளுங்க.

இன்றைய சமுதாய அமைப்பை பாருங்க எங்கும் கொள்ளை, கொலை, விபச்சாரம், கள்ளச்சந்தை, தேவையற்ற தீவிரவாதம், வேலை இல்லாப் பிரச்சனை, ஒருவருக்கொருவர் விரோத செயல்பாடு, இன்னும் பல குற்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் சிறந்த நிர்வாகத்தன்மை இல்லாதைதான் குறிக்கும்.

திறமையற்ற நிர்வாகத்தால் லஞ்சம், ஊழல், அலட்சியப்போக்கு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளின் அடிப்படையில் அரசையும், அரசாங்கத்தையும் பொதுமக்கள் எந்தவிதவித தீர்வையும் முறையாக எதிர்கொள்ளாமல், சமுதாய நிலையை சீரழிக்கும் தேவையற்ற போராட்டம், கடையடைப்பு, சாலைமறியல், போன்ற வன்முறைகளிலும் ஈடுபடுகிறாகள். இதனால் மக்கள் அன்பு அமைதி, ஒற்றுமையை இழந்து வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையுலும் நம் சமுதாயம் சீர்கெட்டு வருகிறது.

இதுபோன்ற சமுதாய அமைப்பில் நாட்டிற்கும், சமூக மேம்பாட்டிற்கும் உழைக்கும் அறிஞர்கள் இன்றைய மனநிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து தனக்குத்தானே ஆறுதல் அடைகிறார்கள். அவர்களால் வேறு என்ன செய்யமுடியும்?

இன்றைய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் அரசு உயர் அதிகாரிகளும், பலர் நாட்டின்மீதும் நாட்டின் மக்கள்மீதும் அக்கறைல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதினை பொய்யாக்கிகொண்டு நம் சமுதாயத்தை சீர்குலைத்து வருகிறார்கள்

இன்றைய நீதித் (காவல்) துறை நிர்வாகம் இளைஞர்களை குற்றவாளியாகத்தான் கருதி தங்களது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்துவருகிறது இதனை பார்க்கும் இளைஞர்கள் பலர் நாடும் சமுதாயம் எப்படி போனால் நமக்கென்ன? என்று நாட்டின்மீது எந்தவித பற்றுதலும் இல்லாமல் "மனம்போன போக்கில் நாமும் போவோம்" என்ற சொல்லிற்கேற்ப வாழ்ந்துவருகிறார்கள். இவர்களை சமூக விரோதிகள் (சட்டத் திட்டங்களை மதிக்காமல் செயல்படும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஒழுக்ககேடான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சாமியார்கள்) சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விருப்பம்போல் வாழ்ந்தவருகிறாகள். இதனால்தான் நம் நாட்டில் இனம புரியாத குழப்பங்களும், தீவிரவாதம் மற்றும் அரசியல் பிரச்சனைகளும், ஜாதிமத இனக்கலவரங்களும் ஏற்படுகிறது.

இதுபோன்ற நிலையில நம்நாட்டில் அமைதி, அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சமதரும சமாதானம் எப்பட ஏற்படும்? பொருளாதார நிலையுலும் எப்படி முன்னேற்றம் ஏற்படும்? நம் நாடு எப்படி வல்லரசு நாடாக எப்படி திகழும். நம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்

இன்றைய நிலையில் நாம் மிகவும் கொடூரமான பிரச்சனைகளை சந்தித்துவருகிறோம் இதற்குகாரணம் உலக நடைமுறையின் உண்மைநிலையை ஒற்றுமையுடன் உணராமல் நாம தவறான செய்கையுடன் வாழ்வதால்தான் நாம் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளைச் சந்தித்தும் அதற்குரிய சட்டதிட்டங்களை உருவாக்கிகொண்டும் வாழவேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறோம்.

நம் முன்னோர்கள் (திருவள்ளுவர், புத்தார், ஏசுபெருமான், அண்ணல் நபிகள்நாயகம், மற்றும் ஞானிகள் போன்றோர்கள்) நம் சமுதாயம் எப்படி போனால் நமக்கென்ன? மக்கள் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன என்ற நிலையில் வாழ்ந்திருந்தால் இன்றைய சர்வதேச சமுதாய அமைப்பு எப்படி இருந்திருக்கும் இதனை சற்று சிந்தித்துபாருங்க,

இதனை சாதாராண குடிமகன் தெரிந்துகொள்ளவதைவிட அரசுநிலை உயர் அதிகாரிகளும், நீதிபதிகளும்,  வழக்குரைஞர்களும், காவல்துறை, உயர்அதிகாரிகளும், சிறந்த கல்வியாளர்களும் தெரிந்துகொண்டு சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ளவேண்டும்

நீதி, காவல் & கல்வித்துறை நினைத்தால் நம் சமுதாயத்தை
சீரழிக்கவும் முடியும், சீராக்கவும் முடியும்

நீதித்துறை நிர்வாகம் 

ஒரு நாட்டின் உயிர்நாடியாகசெயல்படுவது நீதித்துறைதான். நீதித்துறையின் செயல்பாட்டில் தவறுகள் ஏற்பட்டால், அந்நாட்டின் நிர்வாகம் சீரழிந்து மக்களிடையே அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி, இல்லாமல் வாழும் நிலைதான் ஏற்படும். இன்றைய சர்வதேச நாடுகளின் செயல்பாடுகளை உற்று கவனித்துபருங்கள். நாம் அறிவு நிலையை இழந்து நம் சமூகத்தையே சீரழித்து வருகிறோம்.

சிறந்த நேர்மையாக, திறமையாக, அறிவுபூர்வமாக செயல்படும் ஆற்றல் மிகுந்த மனிதர்களுக்கு அதிக அதிகாரத்தை அளித்தால், அந்த அதிகாரத்தால் சட்டதிட்டங்களுக்குட்பட்டு நம் சமுதாயத்தையே சிறப்புடைய செய்வான்.

அதே சமயம் ஊழல்,லஞ்சம், சட்டதிட்டங்களை மதிக்காமல் மக்களின் வாழ்கையை நிலையை உண்மையை உணராமல் செயல்படும் மனிதர்களுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தால்அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நம் சமுதாயத்தையே சீரழித்துவிடுவார்கள் 

இதுபோன்றுதான் இன்றைய நம் நீதி & காவல்துறை நிர்வாகம் செயல்படுகிறது "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்" பொதுமக்களின வாழ்வாதாரத்திருக்கு இடையுறாக பெருங்குற்ற செயல்பாடுகளை மறைத்து நிர்வாகத்தை மேற்கொகள்கின்றன. பெரும்பாலான மக்கள் எதனையும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று நீதி & காவல்துறைமீது அவநம்பிக்கையுடன் வாழ்கின்றனர்.

தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக