அதிக இருள் உள்ள இடத்தில் மனிதர்களை சிறிது நேரம் இருக்க செய்தால் அவர்களில் சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் எங்கே போகிறோம் என்று புரியாமல் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு எந்த வழியையும் தெரிந்துகொள்ளாமல் அலைந்து திரிந்துகொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலர் 'எங்கும் இருள்தானே இருக்கிறது என்ன செய்வது வெளிச்சம் வரட்டுமே என்று அலட்சியபோக்குடன் அமைதியாக இருப்பார்கள். இன்னும் சிலர் இருளைவிட்டு வெளிச்சத்திற்கு செல்வதற்கான வழியை சிந்தித்து தேடுவார்கள்.
- இதில் முதல்வகையில் சொல்லப்பட்டவர்கள் வெளிச்சத்திற்கு செல்வதற்கான வழி எதுவும் புரியாமல் அலையும்பொழுது இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் நிலையில் உள்ளவர்கள் மீது மோதிக்கொண்டு அவர்களாகவே வெறித்தனத்துடன் சண்டைபோடுவார்கள்.
- இரண்டாவதாக உள்ளவர்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் வெளிச்சம் இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? என்ற அலட்சியப் போக்குடன் இருப்பார்கள்.
- மூன்றாவதாக உள்ளவர்கள் யார்க்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் வெளிச்சத்தை அடைவதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து அதன்வழியில் நடப்பார்கள் மற்றவர்களையும் வழிநடத்தி செல்வார்கள்.
ஆதிகால முதல் இன்றைய காலம்வரை, மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூவர்களுடைய நிலையில்தான் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மூன்றுவகை மனிதர்களையும் நல்வழிப்படுத்துவதற்காகத்தான் இந்த பூமியில் ஞானிகள், விஞ்ஞானிகள், பெருமகான்கள், பரமாத்மாக்கள் போன்ற நிலைகளில் இயற்கை சக்தியுடன் அனைத்து உயிரினங்களையும் விட மனித உயிரினமாக அதாவது மனித தன்மையுடன் பிறந்து மனிதர்களுக்குரிய ஆசை, கோபம்,, விருப்பு, வெறுப்பு, பொறாமை, போன்ற தீய எண்ணங்களை தன் மனதுக்குள் அடக்கி இயற்கையின் மனித தர்மப்படி ;நல்வழிப்படுத்தினார்கள். எதிகால நிலையிலும் செய்துகொண்டேருப்பார்கள்.
அன்றைய காலமுதல் இன்றையக்காலம்வரை நான்தான் கடவுள்,, நான்தான் ஞானி, மகான், விஞ்ஞானி என்றுத்தன்னைதானே அறிமுகம்படுத்தியதும் இல்லை, எப்பொழுதும் அறிமுகப்படுத்தவும் முடியாது ஏனெனில் இயற்கையின் மாய சக்தியால் (மகா சக்தியால்) உருவாக்கப்பட்டவர்கள், உருவாக்கபடுவார்கள்.
கண்ணை இமை பாதுகாப்பதுபோல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் காதல் என்ற புனித செல்வம் பாதுகாப்பு தருகிறது. காதல் இல்லை என்றால் இந்த உலகமும், அனைத்து உயிரினங்களும் எதுவும் கிடையாது. இயற்கையால் ஏற்பட்ட காதலால் உருவானதுதான் அனைத்துவகை உயிரினங்களும். காதலை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு வகை உயிரினங்களும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. (எ.கா) வெப்பத்திலிருந்து காற்று உருவாகிறது. நீரின் நேசத்தால் காற்றிலிருந்து நீர் துளிகள் உருவாகி மழையாகப் பொழிகிறது. நிலத்தின் காதலால் மழைநீர் நிலத்திற்கு வருகிறது. மீண்டும் வெப்பத்தின் காதலால் நிலத்தின் தன்மை காற்றாக மாறுகிறது. இதுபோன்றுதான் காதல்நிலை தொடருகின்றன. இவையனைத்தும் ஆகாயத்தன்மையில் அடங்கிவிடுகின்றன. ஆகாயம் போன்ற நம் உடலுக்கு காதல்தன்மை உள்ளன. அந்த காதல்தன்மையால்தான் நம் மனித சமுதாயம் சிறப்பாக செயல்படுகிறது. உறவுகளும் மேம்படுகிறது. எந்த ஒரு காதலுக்கும் ஜாதி, மத, மொழி, இனம் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. காதல் என்பது அன்பு நிலையில் இருமனங்களும் மற்றும் பல மனங்களும் ஒன்றுக்கூடி ஒரு மனமாக அமைவதும் இரு உயிர் ஓர் உயிராய் மற்றும் பல உயிர் ஓர் உயிராவதுதான் மனித காதலாகும். காதலுக்கு, அன்பு, நேசம் என்ற அடைச்சொற்களும் உண்டு. காதலுக்கு அடிமையாகாமல் எந்த ஜீவனும் (மனிதனும் உட்பட) வாழ்ந்ததுமில்லை வாழவுமுடியாது .
காதல் ஓர் புனிதமான ஆற்றலுடையது. காதலின் சாரமாக விளங்குவதுதான் அன்பு, காதலைவிட அன்பு புனிதமானது அன்பு உள்ளத்தை கடக்ககூடிய ஆற்றலுடையது. அதாவது கடவுளைக்காணும் சக்தியுடையது. நாம் அனைத்து ஜீவன்களிடம் அன்பாக நடந்துக்கொண்டால் கடவுளைக் காணலாம். அதனால்தான் அன்பே கடவுள் என்று சொல்லப்படுகிறது. உடலுக்கு உயிர் இருந்தால் எவ்வளவு மதிப்பு இருக்குமோ அந்தளவிற்கு மனித வாழ்க்கைக்கு மட்டுமல்ல அனைத்துவகை உயிர்ன வாழ்க்கைக்கும் உயிராக இருப்பது அன்பு நிலையாகிய காதல்தான். காதல் என்ற உயிர் இல்லாமல் இந்த உலகம் கிடையாது.
ஆனால் புனித தன்மையுள்ள மனித காதல் இன்றயநிலையில் கண் சிமிட்டும் நேரத்தில் (ஓர் நொடியில்) ஆரம்பித்து "ஆசை அறுபது நாட்கள் மோகம் முப்பது நாட்கள்" என்ற நிலையில் உடனுக்குடன் விவாகமும், விவாகரத்தும், வெறுப்பினால் தற்கொலையும் செய்துகொள்ளும் நிலையில்தான் இன்றைய காதலர்கள் வளர்ந்து வருகிறார்கள். இந்த காதல் தேவையானதா? இதனால் யார்க்கு என்ன பயன்? காதலர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அனைத்து ஜீவன்களுக்கும் காதல்நிலை இயற்கையாகவே உருவாகும். அப்படி உருவாகும் காதலை பகுத்தறியும் திறன்பெற்ற மனித இனம் புனிதமாக்கிகொள்ளவேண்டும். அப்படி புனிதமாக்கிகொண்டால் நம் சமுதாய அமைப்பில் இயற்கையாகவே அன்பு, அமைதி, ஒற்றுமை நிலை உருவாகும். இயற்கையாகவே ஏற்படும் காதலுக்கு எந்தவித பிரிவினையும் கிடையாது. ஆனால் மனிதனோ செயற்கையாக காதலுக்கு ஜாதி, இன, மதத்தன்மையை ஏற்படுத்திவிட்டான். இதனால்தான் காதல் புனிதத்தன்மையை இழந்து வியாபார ரீதியாக இயங்கிவருகிறது. அந்தநிலையில் நம் உலகில் அன்பு, அமைதி ஒற்றுமை எப்படி ஏற்படும். இதனை நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். இதனால்தான் குடும்ப வழக்குகள் அதிகமாக நமது சட்ட செயல்பாடுகளையும் உருவாக்கி வருகிறன. இதனால் நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை பின்தங்கிதான் இருப்போம்.
நம் பூவியில் பலர் உலகம் என்பது என்ன என்று புரிந்துகொள்ளாமல் தன்நாடு வல்லரசாக வேண்டுமென்ற தவறான கண்ணோட்டத்தில் நம் உலகத்தின் (இயற்கை) செயல்பாடுகளை சீரழித்து வருகிறார்கள். அவை மட்டுமல்ல உலகத்தின் ஆக்கத்தின் அழிவுநிலைகளைத் தெரிந்துகொள்ளாமல், ஜாதி, மதம்,, இனம், கடவுள், எல்லைப் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு தன்நிலையையே சீரழித்து வருகிறார்கள்.
அறிவியல் கருத்து
நம் பூமி சூரியனிடமிருந்து பிரிந்து வந்த ஒரு நட்சத்திரக்கோள் என்றும் முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினமென்றும் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்றும் கூறுகிறது.
மதவாதிகளின் கருத்து
இந்த உலகத்தை கடவுள்தான் படைத்தான் மற்ற உயிரனங்களையும் நேரடியா உருவாக்கினான் என்றுக் கூறுகிறார்கள். யார் அந்த கடவுள் எந்த உலகத்தை படைத்தான்? ஏன் படைத்தான்? எப்படி படைத்தான்?

இந்த இரு கருத்தினரிடையே யார்? சிறந்த அறிவாளிகள்
இவர்கள் (மனித இனம்) உண்மைநிளையைத் தெரிந்துக்கொண்டால் உலகம் பேரின்பத்தை அடையும், உலகம் பேரின்ப நிலையை அடையவேண்டியே உலகின் தர்ம அமைப்பை விளக்கியுள்ளேன் மீண்டும் விளக்குகிறேன்.
இப்புவியில் இருக்கும் ஒவ்வொரு உயிரனத்திற்கும் உணவு மிகவும் அவசியமாகும். அந்த உணவிற்காக மனிதன் மட்டும் உணவு பயிர் செய்து அதனை பராமரித்து நேரம் பார்த்து அறுவடை செய்து அதனை பக்குவமாக சமைத்து சுவைத்து உண்ணுகிறார்கள். இது நம்முடைய செயல்பாட்டில் நம் கையில் உள்ளது. ஆனால் உணவு பயிர் செய்வதற்கும் பக்குவத்துடன் பயிர் வளர்வதற்கும் எந்தவித பாகுப்பாடுமின்றி இயற்கையே துணைபுரிகிறது.
மனிதர்களோ மனித நெறிமுறையில்லாமல் மனிதநேயமில்லாமல் வாழும்பொழுது இயற்கையும் தன்நிலையை மாற்றிகொண்டால் இப்புவியில் உள்ள உயிரினம் அதுவும் மனித இனம் என்ன செய்ய முடியும்? சூரியனின் சக்தியும் அதன் ஒளியும் அதன் இயற்கை தன்மையும் ஒரு குறிப்பிட்ட ஜாதி, மத,, இனம், மொழி, மற்றும் நாடுகளுக்கு மட்டும்தான் கொடுக்கவேண்டுமென்று பிரிவினை செய்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
ஆனால் நாம் பலப்பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு சிறந்த நோக்கமில்லாமல் தேவையற்ற அமைப்புகளை ஏற்படுத்தி அமைதியையும் ஒற்றுமையும் தேச உணர்வையும் சீரழித்து வருகிறோம். இந்த நிலை நீடித்தால் மனிதனே மனிதனை அழிக்கும் நிலை அதிகமாக உருவாகி இப்புவியில் அமைதி ஒற்றுமையில்லாமல் அதர்மநிலை சூழந்து அழிவுதான் ஏற்படும். அதனால் உண்மைநிலையைத் தெரிந்துகொண்டு தர்மத்தைக் காக்கவேண்டும் அன்பு, அமைதி, ஒற்றுமை ஏற்படுத்தவேண்டும்.
எதனை வேண்டுமென்றாலும் துள்ளியமாக அளந்துவிடலாம். ஆனால் உண்மை என்ற தர்ம நிலையை எந்தக் கருவிக்கொண்டும் துள்ளியமாக அளக்கமுடியாது.
உலகத்தின் காதல் நிலை
காதல் ஓர் புனிதமான ஆற்றலுடையது. காதலின் சாரமாக விளங்குவதுதான் அன்பு, காதலைவிட அன்பு புனிதமானது அன்பு உள்ளத்தை கடக்ககூடிய ஆற்றலுடையது. அதாவது கடவுளைக்காணும் சக்தியுடையது. நாம் அனைத்து ஜீவன்களிடம் அன்பாக நடந்துக்கொண்டால் கடவுளைக் காணலாம். அதனால்தான் அன்பே கடவுள் என்று சொல்லப்படுகிறது. உடலுக்கு உயிர் இருந்தால் எவ்வளவு மதிப்பு இருக்குமோ அந்தளவிற்கு மனித வாழ்க்கைக்கு மட்டுமல்ல அனைத்துவகை உயிர்ன வாழ்க்கைக்கும் உயிராக இருப்பது அன்பு நிலையாகிய காதல்தான். காதல் என்ற உயிர் இல்லாமல் இந்த உலகம் கிடையாது.
ஆனால் புனித தன்மையுள்ள மனித காதல் இன்றயநிலையில் கண் சிமிட்டும் நேரத்தில் (ஓர் நொடியில்) ஆரம்பித்து "ஆசை அறுபது நாட்கள் மோகம் முப்பது நாட்கள்" என்ற நிலையில் உடனுக்குடன் விவாகமும், விவாகரத்தும், வெறுப்பினால் தற்கொலையும் செய்துகொள்ளும் நிலையில்தான் இன்றைய காதலர்கள் வளர்ந்து வருகிறார்கள். இந்த காதல் தேவையானதா? இதனால் யார்க்கு என்ன பயன்? காதலர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அனைத்து ஜீவன்களுக்கும் காதல்நிலை இயற்கையாகவே உருவாகும். அப்படி உருவாகும் காதலை பகுத்தறியும் திறன்பெற்ற மனித இனம் புனிதமாக்கிகொள்ளவேண்டும். அப்படி புனிதமாக்கிகொண்டால் நம் சமுதாய அமைப்பில் இயற்கையாகவே அன்பு, அமைதி, ஒற்றுமை நிலை உருவாகும். இயற்கையாகவே ஏற்படும் காதலுக்கு எந்தவித பிரிவினையும் கிடையாது. ஆனால் மனிதனோ செயற்கையாக காதலுக்கு ஜாதி, இன, மதத்தன்மையை ஏற்படுத்திவிட்டான். இதனால்தான் காதல் புனிதத்தன்மையை இழந்து வியாபார ரீதியாக இயங்கிவருகிறது. அந்தநிலையில் நம் உலகில் அன்பு, அமைதி ஒற்றுமை எப்படி ஏற்படும். இதனை நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். இதனால்தான் குடும்ப வழக்குகள் அதிகமாக நமது சட்ட செயல்பாடுகளையும் உருவாக்கி வருகிறன. இதனால் நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை பின்தங்கிதான் இருப்போம்.
குடும்பம்
நம் சமுதாயம் சிறக்கவும், உலகம் பேரின்ப நிலையை அடையவும் குடும்பம் என்றக் கோயில் சிறப்பாக அமைய வேண்டும். குடும்பம் என்ற சொல் கொடு+இன்பம் என்ற சொல்லிலிருந்து மருவி குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குடும்பநிலையில் ஒவ்வொரு உறவுகளும் விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருந்தால் அந்த குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஆனால் குடும்ப உறவுகளில் இன்றும் மாமியார் மருமகள் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இதனால் நீதிமன்ற வழக்குகள்தான் அதிகரித்துள்ளன அந்த நிலையியல் தனிகுடுத்தனமாக செல்கிறார்கள் இந்தநிலையில் அவர்களிடை எந்தவிதத்தில் சந்தோசம் ஏற்படும்? உறவுகள் எப்படி மேம்படும்? சிந்திக்கவேண்டும்.
பெற்றோர்கள்
தன் பிள்ளைகளை 10 (பத்து) மாதம் சுமந்து பிறகு ஈன்றெடுத்து அந்த குழந்தைகள் தன்நிலையை உணரும்வரை எவ்வளவு துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு அனுபவிக்கிறார்கள்.. அதன்பிறகு வாழ்க்கைக்கு வேண்டிய வழிமுறைகளையும் வகுத்துக்கொடுத்துப் பிறகு திருமண வயதில் திருமணமும் செய்து வைத்து பேரக்குழந்தைகளை பார்த்து கொஞ்சி விளையாடி மகிழ்ந்து வாழ்கிறார்கள் இதுப்போன்ற வாழ்க்கை எதற்காக? இதனை யார் வகுத்துக் கொடுத்தார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்த முறைகளை இன்பங்களை கொடுத்து உறவுமுறைகளை பறிமாறிக்கொள்வதே குடும்பமாகும்.
இந்தநிலையில் மகன்-மருமகள், மகள்-மருமகன் இந்த உறவுமுறைகளில் எந்தவித பாகுப்பாடும், வெறுப்பும், கோபம், எதிர்ப்பும் காண்பிக்காமல், தன்பிள்ளைகள் வளர்ச்சிக்காக எவ்வளவு வசதிகளையும், பாசத்தையும் கொடுத்தீர்களோ அதனை தொடர்ந்து நீயா? நானா? என்ற போட்டிபோடாமல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்பொழுதான் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு குடும்பம் சிறப்பாக அமையும் குடும்பம் என்ற வீடு சிறப்பாக அமைந்தால்தான் நம் நாடும் சிறப்பாக அமையும்.
நம் நாடு வளம்பெற்று சிறப்பாக திகழ தன் பிள்ளைகளுக்கு சிறந்த பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து நல்ல உள்ளம் படைத்த உயர்ந்தவர்களாக உருவாக்கவேண்டும்.

பிள்ளைகள்
இன்றைய நிலையில் பெரும்பாலான எப்படி வளர்ந்தோம் என்ற நிலையை உணராமல், இனி எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்ற நிலையில் மனம் போன போக்கில் வாழ்ந்துவிடுகிறார்கள். அப்படி வாழ்வதால் யார்க்கு என்ன பயன்? சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நம் உலகில் வாழும் ஒவ்வொரு உயிரனங்களும், காலத்திற்கு ஏற்றநிலையில் பலவித இன்பதுன்பங்களை கட்டாயமாக அனுபவித்துதான் ஆகவேண்டும் இது இயற்கையின் விதி, இதனை யாராலும் மாற்றமுடியாது.
அந்த நிலையில் பகுத்தறிவு திறன்பெற்ற மனிதர்களாகிய நாமும் காலத்திற்கேற்ற நிலையில் பலவித இன்பத்துன்பங்களை அனுபவித்துதான் ஆகவேண்டும். இதனை யாரும் தவிர்க்கமுடியாது. நம் வாழ்க்கையின் மன நிம்மதி இல்லாமல் பல துன்பங்களை அனுபவிக்கும்பொழுது இதற்கெல்லாம் நீங்கள்தான் காரணம் என்றுக் கூறி பெற்றோகளை உதாசினப்படுத்தி அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதும் அவர்களைவிட்டு பிரிந்து தனியாக வாழ்வதும், அவர்கள் வார்த்தைகளை அவமதிப்பதும் பிள்ளைகள் செய்யும் மிகப்பெரிய பாவசெயலாகும். இந்த பாவசெயலுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது. இதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும். எப்படி என்றால் 10 பத்து மாதம் கருவில் வளரும் குழந்தைக்காக பல துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்து பிறகு பெற்றெடுத்து அந்த பிள்ளைகள் சிறந்த நிலையை அடையும்வரை ஓயாமலும், தூங்காமலும் தன் பிள்ளைகளுக்காக வாழும்பொழுது, இவர்களுடைய பிள்ளைகள் இவர்களை உதாசினப்படுத்தி மன வேதனையை ஏற்படுத்தும்பொழுதுதான் பெற்றோர்களுக்கு செய்த பாவநிலையை உணருவார்கள். இந்த நிலையில் எப்படி பாவ மன்னிப்பு கிடைக்கும் இவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இந்த பாவ செயல் மீண்டும் தொடராமல் இருக்க தன் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டி, விட்டுகொடுத்து சகிப்புத்தன்மையுடன், அன்புடனும், பாசத்துடனும் மகிழ்ச்சியாக தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரவேண்டும். அப்படி வாழ்ந்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படாது. மீண்டும் மீண்டும் பாவ செயல் தொடராது. இந்த நிலையில் மகன்-மருமகளாக இருந்தாலும் மகள்-மருமகனாக இருந்தாலும் எந்தவித துன்பங்களையும் தாங்கிக்கொண்டு இதனை பெற்றோர்களிடம் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக, அன்புடன், ஒற்றுமையாக வாழ்ந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு குடும்பம் சிறப்பாக அமையும்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை,
தந்தை சொல்மிக்க வார்த்தையுமில்லை,
ஆயிரம் உறவுகள் பிரிவதுமில்லை,
அன்னை தந்தையே அன்பின் எல்லை.
அன்பின் வாழும் நிலையில்தான் கடவுள் அமைகிறது. அந்த கடவுளின் எல்லையாக இருப்பவர்கள்தான் தாயும், தந்தையும் ஆவார்கள். நாம் எந்த ஜாதி, மதம்,இனம்த்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்பின் எல்லையாகவும் முன்னறி தெய்வமாகவும் விளங்கும் அன்னை தந்தை மனமகிழும்படி போற்றி மதித்து வணங்கினால் இயற்கையருளால் எல்லாவளமும் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.இந்த பாவ செயல் மீண்டும் தொடராமல் இருக்க தன் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டி, விட்டுகொடுத்து சகிப்புத்தன்மையுடன், அன்புடனும், பாசத்துடனும் மகிழ்ச்சியாக தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரவேண்டும். அப்படி வாழ்ந்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படாது. மீண்டும் மீண்டும் பாவ செயல் தொடராது. இந்த நிலையில் மகன்-மருமகளாக இருந்தாலும் மகள்-மருமகனாக இருந்தாலும் எந்தவித துன்பங்களையும் தாங்கிக்கொண்டு இதனை பெற்றோர்களிடம் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக, அன்புடன், ஒற்றுமையாக வாழ்ந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு குடும்பம் சிறப்பாக அமையும்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை,
தந்தை சொல்மிக்க வார்த்தையுமில்லை,
ஆயிரம் உறவுகள் பிரிவதுமில்லை,
அன்னை தந்தையே அன்பின் எல்லை.
கணவன் மனைவி
நம் சமூகம் சிறக்கவேண்டுமென்றால் சொந்தபந்தங்கள் உறவுகள் வேண்டும், குடும்பம் ஒற்றுமைவேண்டும். கணவன் மனைவி உறவுகள் புனிதமாகவேண்டும். பெண்மையைக் கண்போல் காப்பவன்தான் கணவன் அதுப்போல் மணாளன் மனம்போல் நடப்பவள்தான் மனைவி. இந்த கணவன் மனைவி இருவரும் அன்பு, அமைதி, ஒற்றுமை மகிழ்ச்சியில் உறவுகளை பரிமாறிகொண்டால் வாழ்க்கையில் குதுகலம் ஏற்படுவதோடு ஆரோக்கியமான அறிவித்திறனுடன் பிள்ளைகளும் பிறப்பார்கள்.
கணவன் மனைவி உறவு புனிதாமனது. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் இந்த உலகம். ஆண் இல்லாமல் பெண் இல்லை, பெண் இல்லாமல் ஆண் இல்லை அதாவது உடல் இல்லாமல் உயிர் இல்லை, உயிர் இல்லாமல் உடல் இல்லை இரண்டும் சேர்ந்திருப்பதுதான் உலகம் என்ற உறவுகள். உலகம் சிறப்பு அமைதிப் பெற கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக இருக்கவேண்டும். ஆனால் இன்று பல கணவன் மனைவிடையே அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சியை காண்பது என்பது குதிரைக்கொம்பாகதான் இருக்கிறது.
தாய்மை
பெண்கள் தாய்மை அடைந்தவுடன், கருவில் வளரும் குழந்தை நலமுடன் பிறந்து சிறந்தவர்களாக வளர தாய்மை உள்ளம் மன வேதனையும், துன்பமும், தீய எண்ணமும் உருவாக்கும்படியான எந்த செயலையும் செய்யாமல் உற்றார் உறவினர்களும், குறிப்பாக கணவன்மார்கள் பார்த்து கவனித்து நடந்துக்கொள்ளவேண்டும்.
பெண்மை நினைத்தால்
ஒரு பெண் நினைத்தால் (தீமைகளை) அழிக்கவும், (நன்மைகளை) ஆக்கவும் செய்வாள், பெண்மை இல்லாமல் இந்த உலகமில்லை அவளுடைய சக்தியில்லாமல் இந்த உலக செயல்பாடுகள் எதுவும் கிடையாது. உலகம் என்ற உடல் ஆணாகவும், அந்த உடலுக்கு உயிராக செயல்படக்கூடிய சக்தி பெண்ணாகவும் உள்ளதுதான். இந்த உலக அமைப்பாகும். ஆணும் பெண்ணும் சேர்ந்தநிலையில்தான் குடும்பமாகிறது.அதுபோல் ஆண்மையும் பெண்மையும் சேர்ந்த நிலையில்தான் குடும்பமாகிறது. அதுப்போல ஆண்மையும் பெண்மையும் சேர்ந்த நிலையில்தான் உலகம் உருவாகிறது.
இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களும் சக்தியின் சொரூபமாகத்தான் விளங்கிக் கொண்டுவருகிறது. எல்லா உயிரனங்களிலும் பெண்மை தன்மைக்கூடிய சக்தியின் சொரூபமாக விளங்கிக்கொண்டு உலகநிலையை இயக்கிக்கொண்டு இருப்பவள்தான் ஆதியும் அந்தமும் நிறைந்த ஆத்ம தாயாகிய ஆதி+பார்+சக்தியாவாள். {(ஆதி-முதல், பார்-உலகம், சக்தி- பெண்மை ) = ஆதிபராசக்தி- எங்கும் நிறைந்த சக்தி}

அவள் உருவம் இல்லாதவள், உள்ளத்தால் உணரக்கூடியவள் எந்த ஜாதி, மத, மொழி, இனம், உயர்வு, தாழ்வு நிலைக்கு அப்பாற்பட்டவள். ஆனால் அன்பினால் அனைத்திற்கும் கட்டுப்படக்கூடியவள்.
நன்மையை வேண்டினால் நன்மையை கொடுப்பவள் தீமையை வேண்டினால் தீமையை தரக்கூடியவள் விருப்பு, வெறுப்பு, இல்லாதவள், யாரையும் நினைத்து எந்த நிலையில் பூஜித்தாலும், ஜெபம், பிராத்தனை செய்தாலும், பள்ளியில் நமாஸ் படித்தாலும் அனைத்தையும் அன்புடன் ஏற்றுக்கொண்டே இருக்ககூடியவள் தாயும், தந்தையுமானவள். பொய் என்ற அதர்மத்தை அழித்து, மெய் என்ற தர்மத்தை காக்க கூடியவள் காலத்திற்கேற்ற நிலையில் செயல்படுத்தக்கூடியவள்.அவள் இல்லாமல் இந்த உலகம் இல்லை இந்த உடல் என்ற உலகமில்லாமல் அவளில்லை. இன்றைய நம் பிரபஞ்ச நிலையை உற்று கவனித்துப் பாருங்கள் எங்கும் அமைதி இருக்கிறதா? அதனால் நாம் ஜாதி, மத இன, மொழி உணர்வை மறந்து நாம் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்ற உணர்வு நிலையில் அமைதியாகவும், அன்பாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், வாழ்வோம்.
- அம்பிகையே! பராசக்தித்தாயே! எண்ணிய எண்ணங்கள் யாவும் நல்லமுறையில் நிறைவேற வேண்டும். திடமான நெஞ்சம் வேண்டும். தெளிவான நல்லறிவு வேண்டும். செய்த பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்தோட வேண்டும்.
படைத்தல், காத்தல், மறைத்தல் என்னும்முத்தொழில்களைப் புரிபவளே! கனியில் சுவையும்,காற்றில் இயக்கமும் கலந்தது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் கலந்தவளே! உலகம் அனைத்தும் உனது அருளே வியாபித்திருக்கிறது. உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்.
- அமுதம்போன்றவளே! புதுமைக்குப் புதுமையாய்,
பழமைக்குப் பழமையாய், உயிருக்குள் உயிராக,என்னுள்ளே நானாகவும், நான் என்பதை உணர்ந்தபின் தானாகவும் நின்று வழிகாட்டுபவளே! உன்னைச்சரணடைகின்றேன்.
- கவலை என்னும் நோய் தீர்க்கும் மருந்தானவளே!
உலகைக் கட்டியுள்ள பேரிருள் நீக்கும் பேரொளிச் சுடரே! யோகியரின் மனதில் இருப்பவளே! தாயே! உன்னை வணங்குகிறேன்.
-பாரதியார்
நாடு முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு.
சக்தியின் சொரூபமாக இருக்கும் பெண்கள் வீட்டை அலங்கரித்து, அன்பு, அமைதி ஒற்றுமை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுப்போல் நாட்டையும் சீராக்கி அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி ஏற்படுத்தி பெண்மைக்குரிய குணத்துடன் வாழ்ந்து நம் இளைய சமுதாயத்தை வழி நடத்த வேண்டும். அப்பொழுதான் உலக அமைப்பில் பேரின்ப நிலை ஏற்படும். அதுபோல் ஆண்களும் செயல்பட்டு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல கடமை உணர்வுடன் செயல்படவேண்டும்.
நம் பூமி அமைதிப்பூங்கவாக உருவாக பெண்களின் கடமை
நம் பூமியில் அமைதி உருவாக சமூகம் சிறப்பு பெறவேண்டும். சமூக சிறப்பு பெற குடும்ப அமைப்பு உருவாகி, குடும்பத்தில் அன்பு, அமைதி, மகிழ்ச்சிநிலை ஏற்படவேண்டும் . திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும.
சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது, நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது? என்ன செய்வது.
- முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல, மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.
- வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள், புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.
- சமையல் செய்யும் போது, மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு, தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறு மருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.
- ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார் அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள் சம்மதிக்கலாம்.
- புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது நம்பிக்கை வரும்.
- கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள், திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய் தந்தையருக்கும் பகைமை வளர காரணமாகிவிடும்.
- புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.
- அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.
- பிறந்த வீட்டில் எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.
- ஆண்டுக்கு ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
- புகுந்த வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கும்.
- விட்டுக்கொடுக்கும் மனது யாரிடம் உள்ளதோ அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.
நாடு முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு.
நம் பூமி அமைதிப்பூங்கவாக உருவாக பெண்களின் கடமை
நம் பூமியில் அமைதி உருவாக சமூகம் சிறப்பு பெறவேண்டும். சமூக சிறப்பு பெற குடும்ப அமைப்பு உருவாகி, குடும்பத்தில் அன்பு, அமைதி, மகிழ்ச்சிநிலை ஏற்படவேண்டும் . திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும.சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது, நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது? என்ன செய்வது.
- முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல, மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.
- வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள், புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.
- சமையல் செய்யும் போது, மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு, தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறு மருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.
- ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார் அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள் சம்மதிக்கலாம்.
- புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது நம்பிக்கை வரும்.
- கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள், திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய் தந்தையருக்கும் பகைமை வளர காரணமாகிவிடும்.
- புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.
- அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.
- பிறந்த வீட்டில் எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.
- ஆண்டுக்கு ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
- புகுந்த வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கும்.
- விட்டுக்கொடுக்கும் மனது யாரிடம் உள்ளதோ அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.
- கணவன் மனைவி உறவுகளும் - பிரிவுகளும்-தீர்வுகளும்
- உறவுகள்
கணவன், மனைவி உறவுகள் ஏற்படுவதற்கு ஒரே ஒரு காரணம் அவர்களாகவே உணர்ந்துக்கொண்டு விட்டுக்கொடுத்து, சகிப்புத்தன்மையுடன், அன்பாக வாழ்ந்தால் மகிழ்ச்சி உருவாகும், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் நட்பு கிடைக்கும்.
- பிரிவுகள்
கணவன் மனைவி உறவுகளிடையே பிரிவு ஏற்படுவதற்கு பலக் காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது, சந்தேகம், போட்டி, தாழ்வுமனப்பான்மை, வருமாண ஏற்றத்தாழ்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் நிலை இல்லாதது, அவற்றுள் சில.
- உறவுகள்
- பிரிவுகள்
- திருமணம் என்பது இருமனம் சேரக்கூடியது கணவன் மனைவி ஒருவர்க்கொருவர் குற்றம் சொல்லி வாழக்கூடாது. குற்றமிருந்தாலும் பரிபூரண நம்பிக்கையுடன் வாழவேண்டும். குற்றம் கண்டுப்பிடித்து குறைகூறிக்கொண்டு வாழ்ந்தால் மனிதளவில் பாதிக்கப்பட்டு மணமுறிவுகூட ஏற்படும்.கணவன் மனைவிடையே, அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவ நமக்கு இவர்தான் கணவர். நமக்கு எல்லாமே கணவர்தான் என்று முழு நம்பிக்கையை உருவாக்கிகொள்ளவேண்டும். அதுபோல கணவனும் இருக்கவேண்டும்.குற்றம் கூறி வாழ்ந்தால் உற்றார் உறவினர்கள்கூட பிரிந்துவிடுவார்கள்.
- இன்றைய கணவன் மனைவிடையே "ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாட்கள்" என்பது திருமண வாழ்கையை அனுபவித்துவிட்டு பிரிவதற்கு முயற்சிக்கிறார்கள். இது சமூக ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தடையாகும். தீர்வு: கணவன் மனைவி உறவுகளிடையே சந்தேகம் என்பது இருக்ககூடாது. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள். ஆமை என்பது பொறாமை, கல்லாமை, இயலாமை, முயலாமை போன்றவை வீடு எனும் உள்ளத்தில் புகுந்தாலும், அமீனா என்பது கடன் வாங்கும் எண்ணமும் வீடு எனும் உள்ளத்தில் புகுந்தாலும் உருப்புடாது என்பார்கள். அதுபோல சந்தேகம் எனும் பூதம் நம் உள்ளத்தில் புகுந்துவிட்டால் நம் வாழ்கையே சீரழிந்துவிடும். இவர்களுடைய சந்தேகத்தால் இவர்களும் மன அமைதியை இழந்து, அவர்கள் சார்ந்தவர்களையும் மனநிம்மதியை இழக்க செய்து வாழ்வது சமூகத்திற்கு நல்லது அல்ல.இதனால் பெருங்குழப்பத்தில் கணவன் மனைவி வாழ்கையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பிரிந்துவந்து வேறொரு வாழ்க்கை வாழவும் செய்கிறார்கள். அப்படி பிரிந்து வேறொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழும் வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் வராது என்பது என்ன உறுதி. அதனால் கணவன் மனைவிடையே அதீத நம்பிக்கையுடன் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.
- பெண்குழந்தைகள் பல பெற்றோர்களிடம் பலவித கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வயதிற்குப் பிறகு மனவேதனையுடன் வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறார்கள். இதற்கு காரணம் சமூகத்தில் நடக்கும் தவறுகளால் தன் மகளும் தவறு செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் மீது நம்பிக்கையுடன் அன்பு செலுத்தாமல், அவர்களை அவர்கள் மனதில் இல்லாத எண்ணங்களை உருவாக்கி தொந்தரவு செய்யும்பொழுது, மனஅமைதிக்கும் வாழ்க்கை பாதுகாப்பிற்கும் அவசரநிலையில் அவர்களாக தன் வாழ்க்கையத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையில் சிறிதுக் காலத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகள் (மணமுறிவு) ஏற்படும் நிலைக்கு வந்துவிடுவார்கள். இதனால் குடும்பம் மட்டுமல்ல சமூகமும் பாதிக்கிறது. தீர்வு: பிள்ளைகளும், பெற்றோர்களும் மனம்விட்டு அன்பாக பேசவேண்டும், வாழ்கையின் தத்துவங்களை உணரவேண்டும்.
ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்
எந்த பெண்ணுமில்லாமல் எந்த ஆணுமில்லை, எந்த ஒரு ஆணும் எந்த ஒரு நிலையிலும் வெற்றிப் பெற்றி, மகிழ்ச்சி, அடைந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு பெண் ஒரு இருக்கிறாள். அந்த மகிழ்ச்சி வெற்றி ஆணின் பின்னிருந்து உருவாக்குவதால்தான் பெண் புத்தி பின் புத்தி என்றுச் சிறப்பாக கூறுவார்கள்.
பெண்களின் இடஒதுக்கீடு.
எந்த ஒரு பெண்ணின் அன்பு, அமைதி, வெற்றி, மகிழ்சிக்கு, பின்னால் யாரும் இருப்பதில்லை, ஏனெனில் வெற்றியும் மகிழ்ச்சியும் இன்னும் 16 செல்வங்களாகக் கூறப்படுவதும் பெண்மையைத்தான் குறிக்கும் அவ்வளவு சக்தியுடையவள் எதனையும் சாதிக்கும் தன்மையுடையவள். ஆனால் இன்றைய நம் புவி அமைப்பில் பெண்களை பெண்களே இழிவுப்படுத்திக் கொள்வதும் சமுதாயத்திற்கு ஒவ்வாத செயலாகும். அதிலும் இடஒதுக்கீடு என்று தரம்பிரிப்பது பெண்மைக்குரிய இழிவான செயலாகும்.
மனித இனம் ஒன்றுதான் இதில் ஆண் பெண் எனும் இருவகைதான் உள்ளன. இந்த பெண் இனத்தில் இன்றைய நிலையில் இட ஒதுக்கீடு கேட்கப்படுகிறதே அது யாருக்காக? ஒட்டுமொத்த பெண்களுக்காகவா? அல்லது ஜாதி, மத, சங்கங்கள் அமைப்பில் செயல்படும் பெண்களுக்காகவா? ஒரு நாட்டில் வாழும் பெண்களுக்காகவா? பதிலை உணர்ந்துபாருங்கள்.
பல பெண்கள் பலவகையில் சமுதாய நலனிற்காக பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள் அவர்கள் எந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமுதாய நலனிற்கு பாடுப்பட்டார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நம் உலக அமைப்பில் எந்த ஒரு செயலுக்கும் வலிமையான ஆற்றல் இருந்தால் அந்த செயலே நிலைப்பெறும் வெற்றிபெறும். நம்முடைய இயற்கைநிலையில் ஒவ்வொரு ஜீவன்களும் தன் வாழ்நாட்களில் ஒவ்வொரு நிலையிலும் போராடித்தான் வாழ்ந்துகொண்டுவருகின்றன. அந்த போராட்டத்தில் வலிமையான செயல் எதுவோ அதுவே வெற்றுப்பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக