மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆன்மிகம்

 பணிவுயுடன் ஆலோசனையான கருத்து

ஆன்மிகம் என்பதை தெளிவுப்படுத்துவது கடல் அமைப்பு போன்றதாகும். இன்றைய நிலையில் ஒவ்வொருவரும் உலகில் அமைதி, ஒற்றுமை, சமாதானம் வேண்டுமென்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்களே தவிர செயல்முறையில் செயல்படுத்தாமல் "பசுத்தோல் போர்த்திய பூலிபோன்று" தான் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் உண்மையிலையே அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமாதானத்தை விரும்பினால் நம் புவி அமைப்பில் ஜாதி, மத, இன, அரசியல் கலவரம் ஏற்படுமா? ஆத்திகம், நாத்திகம் என்ற அடிப்படையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பம்தான் உருவாகுமா? அணு ஆய்தம்கொண்டு போர்தான் நடைப்பெறுமா? இன்றைய காலக்கட்டத்தில் நம் சர்வதேச நாடுகளின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்துபாருங்க அமைதி, ஒற்றுமையான மகிழ்ச்சி சமதர்மம் நிறைந்த செயல்பாடுகள்தான் இருக்கிறதா? இதனையெல்லாம் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆன்மிகத்தில் அடக்கமானதே இந்த உலகத்தின் ஆராம்பமும் முடியும் அதனால் ஆன்மிக நிலையில் இந்த ஆத்மசக்தியால் நம் புவியில் மட்டுமின்றி நம் உலக நிலையிலும் அன்பும் அமைதி, ஒற்றுமை சமதர்ம சமாதானம் அவ்வப்பொழுது ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டியே மிகவும் பணியுடன் ஆலோசனையான கருத்து நிலையை இந்த ஆத்ம அறிவுக்கு தெரிந்தளவு தெரிவித்து செயல்படுத்துகிறேன். இதனால் இந்த ஆன்மிகப் பகுதியை பணிவுக் குணத்துடன் அறிவிப்பூர்வமாக அன்பு வழியில் அதாவது பக்தி மார்க்கத்தில் உணரவேண்டும் என்று பணிவுடன் குறிப்பிடுகிறேன்.

ஒருவரின் உணர்வில் தூய்மை , அன்பு, அமைதி, ஒற்றுமை, இருந்தால் அந்த உணர்வில் பல கோடிமக்கள் மற்றும் அனைத்து உயிரனங்களும் பங்குப்பெறும்.

தேசம் (தேகம்) காக்க
ஒரு தேசமானது தற்பெருமையில் ஆன்மிகநிலையை விட்டு விலகி, உலகரீதியான வெற்றியிலும் வல்லரசாக வேண்டுமென்ற நோக்கத்திலும் கவனம் செலுத்துமேயானால் அந்த தேசம் நிச்சயாமாக பலவித இழப்புகளை சந்தித்தே தீரும். இது உறுதி இதனை நீங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள. அதனால் பொருளாதாரத்திலும், விஞ்ஞானத்துறையிலும் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஆன்மிக நிலையைவிட்டு ஆட்சி நடத்தினால் நம் நாடு பலவித இழப்புகளை சந்திக்க நேரிடும். இதுவரை நம் இந்தியத் தாய்த்திருநாடு எந்தவித இழப்பையும் ஆபத்தையும் அதிகம் சந்தித்ததில்லை ஏன்னென்றால் நம் நாட்டுமக்களின் ஆன்மிக சக்தியே அதற்கு காரணமாகும். இந்தியாவில் பிறக்க நேரிடும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவும் நிலையான சக்தி படைத்தவர்கள் காரணம் இந்திய மண்ணில்தான் உயிரினம தோன்றியக் காலமுதல் இன்றுவரை உயர்வான ஆன்மிக அறிவின் கலாச்சாரமானது  விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மனித இனத்தின் ஆரம்ப காலத்தில் பாரத பூமி என்றழைக்கபட்ட இன்றய நம் இந்தியாவில் முனிவர்களும் துறவிகளும் தனிப்பட்ட முறையில் தங்களுடைய பெயரை விளம்பரப்படுத்திகொண்டு உடல் மற்றும் மனத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய என்றுமே நினைத்ததில்லை அவர்கள் எப்பொழுதும் ஆன்மிக நிலையில் அறிவை வளர்ப்பதிலும் அதன்மூலம் அனைத்து உயிரனங்களுக்கு வாழவேண்டிய வழிமுறையை வகுத்தளித்து நன்மை செய்வதிலுந்தான் தன் வாழ்நாட்களை தியாகம் செய்தார்கள். இந்த நிலையில் உருவானவர்கள்தான் பிற்காலத்தில் தெய்வம் (கடவுள்) என்றுப் போற்றப்படுகிறார்கள். இப்பொழுதும் பல இடங்களில் முனிவர்களும், துறவிகளும், ஆன்மிகப் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அனால் அன்பு நிலையில் ஆன்மிக அறிவைப் பெறாமல் ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் வருமானமே முதல் நோக்கமாகக் கொண்டு வியாபார ரீதியாக செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற நிலையில்தான் தேசங்கள் சீரழிகின்றன.

இப்பொழுதெல்லாம் மனித இனம் உண்மையான ஆன்மிக அறிவு நிலையைத் தெரிந்துக்கொள்ளாமல் மிருகங்களைபோன்று வாழ்ந்து கொண்டு சர்வதேச சமுதாய நிலையை சீரழித்துவருகிரார்கள். மேலும் ஆன்மிக குரு என்றும், கடவுள் யார்? கடவுள் என்றால் என்ன? என்பதை தெரியாமல் கடவுளின் மைந்தன் என்றும் கடவுளின் சேவகன், நான்தான் கடவுள், நானே கடவுளின் அவதாரம் என்றும் தனிமுத்திரையிட்டுக்கொண்டு ஒற்றுமையுடன் அன்பாக உறவுகளை பறிமாறிக்கொள்ளும் மக்களிடையே அரசியல்வாதிகளைப் போன்று தவறானக் கருத்துக்களை கூறிக்கொண்டு நம் மக்களின் மனதை சீரழிக்க (கொலை) செய்கிறார்கள். இதனால் எந்த ஒரு மனிதனும் உண்மையான மெய்ஞானம், விஞ்ஞானப்பற்றிய ஆன்மிகத்தை தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் உயிரனங்கள் அழிக்கப்படுகிறது.

எனவே மனித இனத்தை மீண்டும் அமைதியான ஒற்றுமையான சமாதான சமதர்ம நிலைக்கொண்டுவர பூரண உண்மையைப் பற்றிய ஆன்மிக அறிவானது தற்பொழுது மிகவும் அவசியமாகிறது. அதனால் புத்திசாலியானத் தலைவர்கள் அரசு அரசாங்க ஊழியர்கள், ஜாதி, மத தலைவர்கள் தங்களுடைய சக்தியை உண்ணுதல், உறங்குதல், தற்காத்துகொள்ளுதல் பௌதிக புலன்களை திருப்தி செய்தல் போன்ற சரவதேச ரீதியான செயல்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தாமல் நம் சர்வதேச சமுதாயம் நலம் பெறுவதற்காக பயன்படுத்துங்கள்.

குறிப்பாக இதனை நம் குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், மாநில ஆளுநர்கள், நீதிபதிகள், ஜாதி மதத்தலைவர்கள், ஆதிகம், நாத்திகம் பேசக்கூடியவர்கள் உணர செய்யவேண்டும்.

ஆன்மிகம் - விளக்கம் 

ஆன்மிகம் என்பதுப் பற்றிய பல்வேறு கருத்துகள் நம் சமுதாயத்தில் பரவிவருகின்றன. இதனால் ஆலயங்கள் மற்றும் பல்வேறு மதப் பிரச்சனைகளும் உருவாகிறது. இதற்கு நீதி அமைப்பு தீர்வு அளிக்கமுடியாமல் திண்டாடிகொண்டிருக்கின்றன. அதனால் இந்த ஆன்மிக விளக்கத்தை உணர்ந்து தெளிவான நிலையில் தீர்ப்பு வழங்கிடவும் மக்களிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, ஏற்படுத்தவும் இதனை தெரிவிக்கிறேன்.

  • 1. ஆன்மிகம் என்பது ஆன்ம நிறைந்த யுகம்ந்தான் (ஆன்மா+யுகம்) ஆன்மிகம் ஆகும்.
  • 2.ஆன்மா என்பது பௌதிக உடலைப்பெற்ற உயிர்தான் ஆன்மாவாகும். ஆ+ன்+மா = ஆன்மா, ஆ - என்பது உயிரி, ன் - என்பது உடல் மா என்பது மிகப்பெரிய எண்ணிலடங்காதவையாகும். அதாவது ஆக்கமும் அழியும் இல்லாத எண்ணிலடங்காத மிகப்பெரிய உயிரைப் பெற்ற உயிர்தான் ஆன்மாவாகும்.
(குறிப்பு: இதனை தெளிவான முறையில உணர்ந்தால் உண்மைப்புரியும்) இங்கு ஆன்மா என்றுக் குறிப்பிடுவது இந்த பிரபஞ்சத்தில் (நம் உலகில்) வாழும் உயிரினங்களின் உடல்களில் உள்ள செல்களின் அமைப்பே ஆன்மாவாகும். (நீர் - இரத்தம் , நிலம் - உடல், காற்று - உயிர், ஆகாயம் - உடலை சுற்றிய மேற்பரப்பு, வெப்பம் - உடலை இயக்ககூடிய சீதோஷ்ணநிலை. இவை அனைத்து நிறைந்த அமைப்புதான் ஆன்மாவாகும். இந்த ஆன்மா நிறைந்த பிரபஞ்சம்தான் யுகமாகும். (ஆன்மா + யுகம் = ஆன்மிகம்) 
3.செல்கள் என்பது ஜீவன்களின் இயக்கநிலை செயல்பாடுகளே செல்கள் ஆகும். மனிதர்களை பொறுத்தவரை உடல் உறுப்புகளின் (உள்ளத்தின்) இயக்கநிலை செயல்பாடுகளே செல்களாகும். ஓர் உயிரனத்தின் மனம் தூய்மையாக இருந்து அன்பு, அமைதி, ஒற்றுமை நிலையில் சிந்தனை அடிப்படையில் செயல்பாட்டால் செல்களின் உற்பத்தி நிலை அதிகரிக்கும் சக்தி கூடும். இவ்வாறு உருவாகுவதுதான் ஆத்மசக்தியாகும். இந்த ஆத்மசக்தியைப் பெற்ற உயிரனம் எதனை நினைத்தாலும் நடத்திவிடலாம் அதற்கு தர்மத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். 
ஆன்மா - விளக்கம்
  • இந்த உலகமே உயிர்கள் நிறைந்த தோட்டம்தான். அதாவது ஆன்மா நிறைந்த உடல்தான் இந்த உலகமாகும்.
  • உலகம் என்ற உடலுக்கு உயிராக இருப்பது ஆன்மாதான் ஆன்மா என்ற ஆணிவேறு இல்லாமல் உலக வாழ்க்கையும் உலக நடைமுறையும் செயல்படாது.
  • இந்த ஆன்மாவிற்கு நிறை, குறை, ஜாதி, மதம், மொழி, இனம், துக்கம், சுகம், உருவம், எதுவும் நிரந்தரமாக கிடையாது.
  • இந்த ஆன்ம பெறும் உடலின் அடிப்படையிலையே ஆத்மசக்தி வேறுபடுகிறது.
  • ஆன்மாவிற்கு ஆன்மாவாக இருப்பதுதான் ஆத்மாவாகும். இந்த ஆத்மா ஜீவிக்ககூடிய ஜீவாத்மாவாகவும் எங்கு நிறைந்த பரம்பொருளாக பரமாத்தமாவாகவும் செயல்படுகிறது.
  • ஜீவிக்ககூடிய ஜீவாத்தமாவிற்கு மூலக்காரணமாக இருப்பவைதான் எங்கும் நிறைந்த பரம்பொருளாக இருக்கும் நீர், நிலம், காற்று, வெப்பம், ஆகாயம் எனும் பிரபஞ்ச பூதங்களாகவும் இருக்கும் பரமாத்தமாவகும்.
  • இந்த பிரபஞ்ச பூதங்க்ளிளிருந்துதான் ஜஈவிக்ககூடிய நிற்பவை, நடப்பவை, ஊர்பவை, பறப்பவை, நீந்துபவை போன்ற ஜீவாத்மாக்கள் உருவாயின.
இவை அனைத்தும் ஒன்றுகொன்று தொடர்புடைய அன்புநிலையில் செயல்பட்டுகொண்டிருகின்றன. 

அழிவில்லா ஆன்மாவின் ஆரம்பமும் முடிவும்

ஆன்மாவின் வாழ்வுநிலை
இந்த ஆன்மா நிலைக்கு எந்த ஒரு பாவபுண்ணியம் செயல் எதுவும் கிடையாது. ஆன்மா பெறும் உருவத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலும் ஆன்மிக அறிவின் செயல்பாட்டின் அடிப்படையிலும் அதன் பாவபுண்ணியம் அமைகிறது. இதற்கு எந்தவித கருணையும் மன்னிப்பும் கிடையாது. அதற்கான பலனை அடைந்தே தீரவேண்டும் அவ்வாறு அமையும் பலன் ஆன்மாவை எந்த நிலையிலும் சேராது.

பாவம்: பாவம் என்பது தவறு என்று தெரிந்தபிறகும் அதனை மீண்டும் செய்வது பாவமாகும். இதற்கான பலனை அடைந்தே தீரவேண்டும்.
  • புண்ணியம்: பண்ணியம் என்பது சரி, தவறு, என்றுத் தெரிந்தப்பிறகும் அனைத்து ஜீவன்களும் நன்மைப் பெறும்வகையில் செய்யும் செயல்தான் புண்ணியாமாகும் .

ஆழிவில்லாத ஆன்மாவை உணர

நம் உடல் உறுப்புகளால் குறிப்பாக நம் இரு கண்களால் அறியப்படும் பொருள்களை இப்படி இருக்கிறது அப்படி இருக்கிறது என்று உணர்ந்தும், அறிந்தும் சொல்லமுடியும் ஆனால் அறியமுடியாத ஆன்மாவை அறிவுறுத்தி இப்படித்தான் இருக்கும் என்று கூறமுடியாது.

அறிந்தடாத நிலையிலுள்ள ஆன்மாவை எப்படி நாம் அறிந்திடமுடியும்? 

ஆன்மாவை உணரும் நிலை
ஆன்மிகத்தின் இருகண்களாகிய மெய்ஞானம், விஞ்ஞானத்தின் வழியாக உள்மனத்தை கடக்கும்பொழுது அதாவது உள்மன தெளிவினால் மெய்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் மேற்கொண்டு அறியப்படும் பொருள் அறியப்படாமல் நீக்கமற வெட்ட வெளியாகும்போது ஆன்மாவை உணரலாம்.

அவ்வாறு உணரப்படும் ஆன்மாவை எப்படிபட்டது என்று எவராலும் வரையறுத்து நிர்ணயாமாகச் சொல்லமுடியாது. எல்லையில்லா வெற்றிடமாகிய உள்ளத்தை எவனொருவன் கடந்து அறிந்துகொள்கிறானோ அவனால் மட்டுமே ஆன்மா அப்படி உள்ளது என்று வரையறுத்து - நிர்ணயமாகச் சொல்லமுடியும் அதாவது கடவுளை அறிகிறவனே ஆன்மாவை காணமுடியும்.

கடவுள்

இந்த உலக நிலையில் வாழும் மக்கள் கடவுளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமல் வாழ்வதால்தான் நம் புவி அமைப்பில் அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி காணப்படுவதில்லை அதனால் நம் உலக நிலையில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்க வேண்டி கடவுளைப் பற்றி தெரிவித்து விளக்குகிறேன்.

கடவுள் என்பது உன் உள்ளத்தை கட- அறிந்துக்கொள் என்றுப் பொருளாகும் உள்ளம் என்பது கடல் போன்றதாகும். கடல்போன்ற உள்ளத்தை நீ ஆழ்ந்து கடந்து செல் என்றுப் பொருள் கூறும் சொல்தான் கடவுளாகும். கடலைப் போன்று ஆரம்பமும் முடியும் உருவமும் எல்லையும் இல்லாத ஆன்மா (உயிர்) நிலைக்குத்தான் உள்ளம் என்றுபெயர். இந்த உள்ளம் எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறது. எந்த விதத்தில் செயல்படுகிறது. என்பதை அறியக்கூடிய-கடக்ககூடிய நிலைக்குத்தான் கடவுள் என்ற சொல் வழங்கப்படுகிறது.

கடவுளின் சக்தியை உணர்தல்

கடல்போன்ற உள்ளத்தை ஆழ்ந்து கடந்துச் செல்லும்பொழுது ஒவ்வொரு ஆன்மாவிற்குள் (உயிர்க்குள்) அபாரசக்தி உணரப்படுகிறது. அந்த சக்திதான் ஆத்மசக்தியாகும். அவ்வாறு உள்ளத்தால் கடந்து செல்லுக்கூடிய ஆத்மா சக்திதான் கடவுள் சக்தியாகும்.
  • இந்த கடவுள் சக்தியைக் காண முதலில் உள்ளத்தை உணர-கடக்க வேண்டும்
  • உள்ளத்தை எப்படி உணருவது - கடப்பது? உள்ளத்தை உணர முதலில் ஆன்மாவை உணர வேண்டும்.
  • ஆன்மாவை எப்படி உணருவது? ஆன்மாவை உணர ஞான நிலையை அடையவேண்டும்.
  • ஞான நிலையை அடைய தியான நிலையை முறையாக மேற்கொண்டால் ஞான நிலையை அடையலாம்
  • உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான். 
  •  அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.
  • பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள்.
  •  மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டு

தியானம்

தியானம் என்பதற்கு மெய்பொருள் உன்னை நீயே அர்ப்பணி என்பதாகும். மனதை அமைதிப்படுத்துவதும் மனிதனை மிருகமாக்குவதும் மனிதனாக்குவதும் மனந்தான். அந்த மனதினை தியானத்தின் மூலம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும்பொழுது ஆணவம், அகம்பாவம்-கர்வம் கோபம், அகன்று மனம் சாந்தம் அடைகிறது. அமைதியடைந்த மனம்-உள்ளம் தெளிவும் பெறும்பொழுது ஞானம் உண்டாகிறது. ஞானத்தின் மூலம் உண்மையின் பரிபூரண நிலையை உணர முடிகிறது.

தியான நிலையில் கடவுளை உணருதல்
உலகமே சூட்சமமான ஒரு சக்தியின் இயக்கத்தில் அடங்கி இருக்கிறது. அதுப்போன்றுதான் சூட்சமான உடலின் உணர்ச்சிவேகங்கள் ஐம்புலன்களில் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றையெல்லாம் கட்டுப்பாட்டுடன் இயக்குவது உள்ளமே- மனமே. உள்ளத்தை உணர ஆதமாவால் தன்னையே தியானிக்கும் பொழுது நான் (ஆத்மா) என்னக்குள்ளேயே இருக்கிறேன் என்ற உணர்வுநிலை ஏற்படும். அப்பொழுது நாம் யார்? மற்றவை எல்லாம் என்னன்ன? என்ற உணர்வு நிலைக்கு எல்லாம் ஒன்று என்பதை நம்முள்ளே நம் உள்ளத்தில் விடை உருவாகும். இந்த உணர்வு நிலைக்கு விடை உருவாகுமிடந்தான் உள்ளமாகும். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்று நம் உள்மனதில் ஆசை எனும் கடலுக்குள் முழ்கி முத்தை கண்டெடுக்கும் முயற்சிதான் தியானம் நிலையாகும்.

ஞானம் எனும் நல்ல முத்தைக் கண்டெடுத்துவிட்டால் ஞான ஒளியின் மூலம் உலக நிகழ்வுகளையும் உலக அமைப்புகளையும் அறிந்துக்கொள்ள முடியும். இதற்கு அகத்தெளிவுப் பெற்று ஆத்மஞானத்தை பெறவேண்டும்.  ஆத்மஞானத்தை பெற்றவனால் தனைத்தானே அறிந்தகொள்ளமுடியும். தன்னை அறிந்துகொள்ளும் பொழுது உள்ளே உள்ள ஆன்மாவை உணர்ந்துக் கொள்ளமுடியும். ஆன்மாவை உணர்ந்துகொள்ளும் பொழுது உயிரோடும், உடலோடும் கலந்துள்ள உள்ளத்தை உணர்ந்துக்கொள்ள முடியும் அவ்வாறு உள்ள உள்ளத்தை உணரக்கூடிய கடக்ககூடிய நிலைக்குத்தான் கடவுள் என்றுப் பெயர்.

இந்த கடவுள் என்ற சொல்லிருந்த்தான் அல்லா, ஆண்டவன், இறைவன், கர்த்தர், தேவன் என்ற பல சொற்கள் உருவாயின. இதனை உணராத இன்றைய நம் சமூகத்தினர் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், கடவுளின் குமாரன், கடவுளின் தீர்க்கதரசி, கடவுளின் சேவகன் என்றும், நானே கடவுளின் அவதாரம் என்றுக் கூறிக்கொண்டும் நம் சமூத்தினரிடையே ஜாதி, மத, இனம், மொழி, பிரிவை ஏற்பத்திக் கொண்டு அரசு, அரசாங்கத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே சீரழித்து கொண்டு வருகிறார்கள். இதனை உணர்ந்து நம் சமுதாயம் நலம்பெற்று உலகில் அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி உருவாக வேண்டியே கடவுள் நிலையையும் கடவுளாக அழைக்கப்படும் சொற்களையும் விளக்கியுள்ளேன்.
ஒரு மனிதன் தன் உள்ளத்தை - மனதை அறிந்துகொண்டு மக்களை வழிநடத்தி சென்றான் என்றால் அவனால் இந்த உலகம் பேரின்ப நிலைய அடையும்.
  • அல்லா : என்பது அனைத்தும் நீயே
  • ஆண்டவன்: என்பது உன்னை நீயே ஆட்கொள்
  • இறைவன்: என்பது உனக்கு நீயே இறையாக இரு
  • கர்த்தர்: என்பது உனக்கு நீயே கருவாக இரு
  • தேவன்: என்பது உன்னை நீயே தேடிகொள்
  • ஆலயம்: என்பது ஆன்மாவை உணருந்து தன வசமாக்கிகொள்ளும் இடம் (ஆன்மாவை உணருமிடம்தான் ஆலயமாகிய பள்ளிவாசல், கோயில்கள், தேவாலயங்களாகும்)
  • ஆன்மிகவாதி:  ஆன்மிகவாதி என்பவர்கள் ஆத்திகர்களாகவும், நாத்திகர்களாகவும் இருந்து, அன்பையும், அமைதியையும், ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் போதிக்ககூடியவர்கள்தான் ஆன்மிகவாதிகளாவர்கள்.
1. ஆத்திகர்: ஆத்திகர் என்பவர் இல்லாததை இருக்கிறது என்றுக் கூருவபவர், தன்னம்பிக்கை இல்லாமல் பிறரை நம்பி வாழ்கிறவர்கள் ஆத்திகர்.    
2. நாத்திகர்:நாத்திகர் என்பவர் இருக்கிறதை இல்லை என்று கூறி பகுத்தறிவுடன் உடல் உழைப்பை மட்டும் நம்பி வாழ்பவர்கள் நாத்திகர். 
இவற்றையெல்லாம் உணர்ந்து அன்பு வழியில் ஆண்டவன் நிலையை அடைந்தவர்கள்தான் திருவள்ளுவர், புத்தர், இயேசு, முகமது நபிகள், போன்ற எண்ணற்ற பெருமான்கள் ஆவார்கள்.

  • தீவிரவாதம்: தீவிரவாதம் என்பது உணமைநிலையை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற இழப்பை ஏற்படுத்தகூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு தீவிர வாதம் செய்து அவசரநிலையில் செயல்படுவது. 

  1. தீவிரவாதிகள்: தீவிரவாதிகள் என்பவர் எதனையும் உணராமல் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற செயல்பாட்டில் வாழ்பவர்கள்.

மெய்ஞானம், விஞ்ஞானம்

ஆன்மிகத்தின் இருகண்களாக இருப்பவைதான் மெய்ஞானம், விஞ்ஞானமாகும். இந்த மெய்ஞானம், விஞ்ஞான நிலையை அடைந்தால் ஆன்மிக அறிவைப் பெறலாம் இந்த ஆன்மிக அறிவை அன்பு நிலையில் பெற்றால் ஆண்டவனின் நிலையை அடையலாம். ஆண்டவனின் நிலையை அடைந்தால் உலகில் சமதர்மசமாதானம் நிறைந்த பேரின்ப நிலையை அடையலாம்.
ஞானம்: ஞானம் என்பது தூய உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணம், சிந்தனை, செயல், உறுதி, இதுதான் ஞானமாகும். (உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்துக் கொள்வதுதான் ஞானமாகும்) 
அஞ்ஞானம்: அஞ்ஞானம் என்பது அறியாமையை அதாவது மனத்தெளிவில்லாமையைக் குறிக்கும். உள்மனதால் உணராமல் இருபது போன்று தோன்றுவதை உண்மை என்று உணருவது அஞ்ஞானமாகும்.
மெய்ஞானம்: மெய்ஞானம் என்பது தூய உள்மனத் தெளிவைக் குறிக்கும் மனம் தெளிவுபெற்று உண்மைப் பொருளை உணர்த்துவது மெய்ஞானமாகும்.

அஞ்ஞானத்தில் நம் உள்ளம் செயல்படும்பொழுது உணமைப்பொருளை உணராமல் நமக்கு பேருதவியாக இருக்கக்கூடிய பிரபஞ்சபூதங்களாகிய நீர், நிலம், வாயு, வெப்பம், ஆகாயம், இவற்றின் செயல்பாட்டில் பலவித இடையூறுகளை செய்துவருகிறோம். நாம் செய்யும் தவறான செயல்களால்தான் நம் புவியில் நிலநடுக்கம், குடிநீர் பற்றாக்குறை, சுவாசதன்மை கோளாறு, வெப்பம்நிலை அதிகரிப்பு, ஆகாயதின்பால் பல பேரழிவுகள் ஏற்படுகின்றன.

மெய்ஞானத்தால் எங்கும் நிறைந்துள்ள ஜீவாத்மாவை இயக்ககூடிய பரம்பொருளாகிய பரமாத்மாவாக இருக்கும் நீர், நிலம், வாயு, தீ, ஆகாயம்,எனும் பிறபஞ்ச பூதங்களின் மீது அன்பு செலுத்தி உலகநிலையில் அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்.

விஞ்ஞானம்

ஞானத்தினுள் தோன்றியதுதான் விஞ்ஞானம். ஞானத்தினால் உள்ளத்தில் தோன்றியதை ஆச்சரியப்படக்கூடிய வகையில் விசித்திரமாகவும் விந்தையாகவும் செயல்படுத்துவதான் விஞ்ஞானமாகும் (விந்தை+ஞானம்=விஞ்ஞானம்) 

ஆதி முதல் அந்தவரை மெய்ஞானம், விஞ்ஞானமாகிய ஆன்மிக நிலையக் கொண்டே உலகம் இயங்கிக்கொண்டு இருக்கும்.

அஞ்ஞானத்தில் உருவாகும் விஞ்ஞானம் அழிவைத்தரும் மெய்ஞானத்தால் உருவாகும் விஞ்ஞானம் சிறப்பை தரும்.

உலக அமைப்பும், இயற்கையும் நமது வாழ்க்கை முறையும்

உலகம் என்றால் என்ன? அது எப்படி இருக்கிறது? அது எப்படி உருவானது? எது உலகம்? என்பதை பகுத்தறிவுத்திரன்பெற்ற மனிதன் சிந்திக்கவேண்டும். சிந்தனையோடு விட்டுவிடாமல் உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தன்பணியை மேற்கொள்ளவேண்டும்.

இயற்கை (இயல் +கை) என்பது செய்யும் செயல்தான் இயற்கையாகும், இயல்= செயல், கை= செய் = செயல்செய் (இயற்கை-செயல்செய்) என்பதாகும்.

ஒரு மனிதன் எந்தநிலையில் மெய்ஞானம், விஞ்ஞானம் அறிவைப் பெற்றாலும் அஞ்ஞானத்தில் வாழ்ந்தாலும் மாயை என்ற உலகில் இயற்கை தன் செயலை செய்துகொண்டே இருக்கும். அந்த இயற்கையின் செயலை உணர்ந்து மாயை என்ற அஞ்ஞானத்தை அகற்றுவதே ஆன்மிகத்தின் இருகண்களாகிய மெய்ஞானம், விஞ்ஞானமாகும். அதன்மூலம் ஆன்மாவை உணர்ந்தால் உலகம் என்பதற்கும் இயற்கையின் செயலுக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் தெளிவான விடைகிடைக்கும்.


உலகம் என்பதும் அதன் ஆரம்பமும் அதன் முடிவும்:

உலகத்தைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம் பல ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும், பூமியைக் காண்பித்து இதுதான் உலகம், உலக அமைப்பு, உலக வரைபடம் என்றும்கூட சொல்வார்கள். அப்படி இருந்தும் சந்திரன் மற்றும் மற்றக்கோள்களை கண்டுபிடித்து, அங்கும் மக்கள் உயிர்வாழலாம் என்று விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி செய்து அங்கும் சென்று வாழ்க்கை நடத்த முயற்சி செய்கிறார்கள். அப்படி வாழ்ந்தாலும் அதுவும் ஓர் உலகம் என்று சொல்லமுடியுமா? அப்படி என்றால் எது உலகம்?

உலகத்தையும் அதன் ஆரம்பம் முடிவையும் சுருக்கமாக குறிப்பிடபோனால் தாயின் கருவறையில் உயரினம் உருவாக்கப்பட்டு அதற்குரிய கால நேரத்தில் வெளியாகி பிறகு பருவங்களை கடந்து இறுதியில் முதுமையடைந்து முதுமையின் காலத்திற்குரியப்படி மரணம் அடைவதுப்போன்றுதான் இந்த உலகமும் அதன் ஆக்கமும், அழிவும்

முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை சூழலால் பலரின் அறிவுரைப்படி மனிதஇனம் ஜாதி, மதம், இனம், மொழி, நாகரிகம் எனும் நிலையில் பிரிக்கப்பட்டு, அந்த பிரிவினையை ஏற்றுகொள்ளும் வகையில் தன் மனதை பக்குவப்படுத்திக்கொண்டு வாழ்ந்தனர். அதன் விளைவாகவே அப்பொழுதும் பலபிரிவினர்களிடையே பலப் பிரச்னைகள் இருந்தது. இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும். இது இயற்கையின் சூழலால் மனிதர்கள் ஏற்படுத்திகொண்டது.

இதுபோன்ற இயற்கை சூழலால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகள் மனித இனம் அழியும் தருவாயில் மட்டும் மனித சிந்தனைகள் ஒருமுகப்படுத்தப்பட்டு பலப் பிரிவினைகள் ஒழிக்கப்படும். அதனிடையில் எந்த ஒரு மனிதனாலும் எந்த ஒரு அமைப்பாலும் இந்த பிரிவினைகளை ஒழிக்கமுடியாது ஏனெனில் மாயையால் சூழப்பட்டவைதான் இந்த உலகம். அதாவது உலகம் முழுவதும் அஞ்ஞானத்தால் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரிவினைகளை எப்படி ஒழிக்கமுடியும்?

அஞ்ஞானத்தை அகற்றி ஆன்மிக நிலையில் மெய்ஞானம், விஞ்ஞானத்தைப் பெற்றால் மட்டுமே பலபிரிவினைகளை கட்டுப்படுத்தமுடியும்.

அந்த நிலையில் புத்தர், தெய்வப்புலவர் திருவள்ளுவர், இயேசு பெருமான், நபிகள் நாயகம். மாகாவீரர், இன்னும் போன்றோர்கள் ஆன்மிக நிலையில் அன்பு மார்க்கத்தில் அதாவது பக்தி மார்க்கத்தில் மெய்ஞானம், விஞ்ஞானம் அடைந்து மக்களிடையே அன்பு, அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தினார்கள். இன்றைய நிலையில் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு இவர்கள் ஆன்மிக அறிவைப் பெற்று அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தமது கருத்துகளை போதித்தார்கள். அதனையுமீறி அமைதி ஒற்றுமை இல்லை என்றால் அவர்கள் கூறிய உண்மை-தர்மநிலையை உணர்ந்துகொள்ளவில்லை என்றுதான் பொருளாகும்.

இன்றைய நிலையை கணக்கிட்டுபாருங்கள் எதனை பிரிவுகள் அதிகரித்துள்ளன. அதனை ஒழிக்கமுடிந்ததா? அதனால் தங்கத்தை எந்தளவிற்கு மெருகூட்டுகிறமோ அந்தளவிற்கு நாம் ஆன்மிக அறிவைப் பெற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பலப் பிரிவினைகளை கட்டுப்பாடு நிலையில் ஒழுங்குப்படுத்தி மக்களிடையே அமைதி, அன்பு, மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கமுடியும்.

(குறிப்பு) வேண்டுகோள்உலகம் அழியபோகிறது என்று மூடத்தனமாக வீன்வதந்தியை பரப்பவேண்டாம்.

உலகம் ஓர் மாயத்தோற்றம்

மாயம் என்பது ஒரு மாற்றம் நடந்த பிறகு அந்த மாற்றம் மறைந்து புதிய மாற்றமடைகிறது அவ்வாறு தோன்றகூடியது தோன்றியது மாறக்கூடியது ஆச்சரியப்படக்கூடியது போன்ற உறுதியற்ற செயலைதான் மாயம் என்று கூறப்படிகிறது. இதில் நாம் வாழும் பூமியின் அமைப்பும் அப்படித்தான் உள்ளது. பூமியின் அமைப்பில் பல இடங்களில் நீர், நிலம், காற்று, எரிமலைகளால் பல மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருகின்றன. இந்த மாற்றம்தான் மாயமாகும்.

மாய அமைப்புடைய இந்த உலகத்தின் கடவுளின் நிலை என்ன?

இன்றைய நம் மனிதர்கள் ஒவ்வொரு மதத்திலும், ஜாதியிலும் "நான்தான் கடவுள், என்னால்தான் உலகம் படைக்கப்பட்டது" எல்லா செயலும் என் செயலே" என்று அவரவர்கள் மதத்தில் கடவுள் கூறுவதாக கூறி உருவம் அமைத்து பூஜை, ஜெபம் செய்துவருகிறார்கள்.

இவர்கள் உண்மையாக பூஜை ஜெபம் செய்து வணங்கினால் அந்த கடவுளிடம் நீர், நிலம், காற்று, வெப்பநிலைகளில் பலவித பேரழிவுகள் ஏற்படாமல் தடுக்க சொல்லலாமல்லவா? சமீபத்தில் பூகம்பம், சூறாவழி,  குடிநீர்பற்றாகுறை, அணு ஆய்தபோரால் பலவித பேரழிவுகள், வெப்பநிலை அதிகரிப்பு போன்ற நிலைகளில் பல மக்கள் உயிரழந்தார்கள் அவர்களை எந்த கடவுள் காப்பாற்றினார்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் மேலும் பயங்கரவிதமான பேரழிவுகள் நம் பூவியில் நடக்க இருக்கிறது. இந்த பயங்கர பேரழிவுகளை நம் பூவியில் எந்த கடவுள் தடுப்பார். பதில் கூறிப்பாருங்கள். மனிதர்கள் மனித நேயமில்லாமல் பூஜை, யாகம், ஜெபம், பிராத்தனை, தொழுதல் எனும் செயல் செய்தாலும் அதன் அழிவுகள் (மாயம்) ஏற்பட்டுகொண்டேருக்கும் ஏனென்றால் இது இயற்கையின் செயல்.

இதுபோன்று அழிவுகள் ஏற்படுவது ஞானிகளுக்கும், விஞ்ஞானிகளுக்குமட்டுந்தான் தெரியும் எப்படி என்றால் முற்றும் துறந்து இந்த உலகில் எதுவும் சொந்தமில்லை எல்லாப் பொருளும் எல்லோருக்கும் பொதுவானவை எல்லாப் பொருளும் இயற்கையால் படைக்கப்பட்டவை இதில் அவரவர் அறிவுக்கும் குணத்திற்கும் ஏற்ப அவரவர்களுக்கு தேவையானப் பொருள்களைப் பெற்று பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றன என்றுணர்ந்து உண்மைநிலையில் இருக்கும் ஞானிகளுக்கும், அறிவுப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து அழிவு, ஆக்கம் இவற்றின் உண்மைநிலை அறிந்து செயல்படும் விஞ்ஞானிகளுக்கும்  மட்டும்தான் இயற்கை அமைப்பின் (ஆதி+பார்+சக்தி- ஆதி-முதல், பார்-உலகம், ) சக்தி புரியும்.

கற்பனை உலகம்

உலகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கற்பனையான ஒன்றாகும். கற்பு+அனை என்பது வெளி செயல்களின் செயல்பாட்டின் வளர்ச்சியால் கவரப்பட்டு உள்ளுக்குள் மாயநிலையில் மாற்றமடைவதே கற்பனையாகும். எந்தவித கற்பனையாக இருந்தாலும் அளவோடு இருக்கவேண்டும் "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்" என்பதுப்போல மிதமிஞ்சிய கற்பனை வாழ்க்கையில் பேராபத்தை விளைவிக்கும்.

நம்முடைய கற்பனை வாழ்க்கையின் பேராபத்தை விளக்கி உலகத்தின் செயல்பாடுல்கள் சிறப்பாக இயங்க முன்று நிலையை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டும் அவை.

உண்மை நிலை   ------  அறம்        ------  (வாய்மை, தர்மம்) 
அர்த்தம்                  ------  பொருள்   ------  (காரண, காரியம்) 
மகிழ்ச்சி                 ------  இன்ப்ம்     ------  ( உறவு) 

இவற்றின் அடிப்படையாகத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நம் உலக வாழ்க்கையில் அன்பு அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமாதானம் அவ்வப்பொழுது ஏற்பட்டுகொண்டேயிருக்கவேண்டும் என்பதற்காக என்றும் அழியாத அனைத்து மதத்தினர்க்கும் பொதுவான உலக பொதுமறையாகிய திருக்குறள் எனும் முத்தை உலகிற்கு அற்பணித்தார்.

அறம், பொருள், இன்பம், பற்றிய சிறு விளக்கம்.

  அறம், பொருள், இன்பம் இந்த மூன்றின் நிலையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரனங்களின் செயல்வகையிலும். ஒவ்வொரு உண்மைநிலையும் அதற்கான அர்த்தமும் அதற்குள் இன்பமும் இருக்கும் இருக்கிறது. (எ.கா) மரங்கள் வகையில் அரசு, ஆலம், வேம்பு மரங்களை எடுத்துக்கொண்டால் அதன்பருமனோ பெரியது அதன் காய்கனிகளோ சிறியது அதுபோல் கொடிவகையில் பரங்கி, பூசணிகொடியின் பருமனோ சிறியது ஆனால் அதன் 
காய்கனிகளோ பெரியது இயற்கையின் படைப்பில் இரண்டு நிலையின் வித்தியாசங்களை உற்று கவனித்துப் பாருங்கள் உண்மைப்புரியும், அர்த்தம் தெரியும், இன்பம் கிடைக்கும் அதன் விளக்கம் கிழே

பசு தன் இரத்தத்தையே பாலாக தருவதுப்போல் அரசு, வேம்பு மரங்களும் காற்றின் அசுத்தங்களை சீராக்கி தூய நிலையில் காற்றை வெளியிடுகின்றன அந்த காற்றை அனைத்து உயிரனங்களும் மனிதர்கள் உட்பட சுவாசிக்கும்பொழுது மனிதனுடைய உடல், உள்ளம், இயற்கையாகவே சீராக்கப்பட்டு அனைத்து உயிரனங்களையும் அன்பு நெறியில் நிர்வகிக்கின்ற மெய்ஞானத்தை பெறுகின்றன பெறவும் தூண்டுகின்றன.

உலகத்தை உணர்ந்து நிர்வகிக்கூடிய அறிவாற்றலையும் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்ககூடிய ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதும்,, சுற்றுபுறத்தை தூய்மைப்படுத்துவதும் ஆலம், மற்றும்,, அரசு,, வேப்பமரங்களின் இயற்கை நிலைபணியாகும்.

 அதன் அடிப்படையில்தான் உலக செயல்பாடு சிறப்பாக செயல்படவேண்டி நம் முன்னோர்கள் மட்டுமின்றி இன்றைய மக்களும் அரச மரத்தை ஆணாகவும், வேம்பு-வேப்பம் மரத்தைப் பெண்ணாகவும் பாவித்து மனித திருமணங்களைப போன்று மரங்களுக்கும் திரு+மணம் செய்து அனுதினமும் மரங்களை சுற்றி வலம் வருகிறார்கள் இவ்வாறு அனுதினமும் வலம்வரும்பொழுது இந்த மரங்களின் காற்றை சுவாசிக்கும் நிலை அதிகரிக்கும் அந்த சுவாசநிலையால் உள்ளத்தில் அமைதியும்,, ஞாபகசக்தி, சிறந்த அறிவாற்றல் உடல் உள்ளபலம் அதிகரிப்பு கற்பு நோய் தீர்க்கப்பட்டு குழந்தை பெறுதல், பித்து அடைந்தவர்களுக்கு பித்து தெளிவித்தல் இதுபோன்ற நன்மைகள் பெறலாம். பலவித நன்மைகளைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்று உலக நன்மைக்காக ஜாதி, மதம், இனம், மொழி பாராமல் அனைவர்க்கும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் நாம் இவையெல்லாம் மதம் சடங்கு, மூடநம்பிக்கை என்ற பெயரால் உதாசினம் செய்கிறோம்.

நம் பாரத அமைப்பில் பல இடங்களில் அரசு,, வேம்பு மரத்தை தெய்வமாக போற்றி மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கி வருகிறார்கள். இதில் மஞ்சள் பூசுவது மேலும் காற்றிலுள்ள கிருமிகளை அழித்து நம் சுவாசத்தன்மையை தூய்மைபடுத்தி நுரையீரலுக்கு மிதமான இயக்கநிலையை தருகின்றன. அதனால்தான் இந்தியநாட்டு குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் மஞ்சள் நீராடி, குங்குமம் திலகமிட்டு மங்களகரமாக மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் நோய்கள் பரவாமல் இருப்பதற்கு முக்கியகாரணம் இயற்கைவளங்கள் அதிகரிப்பும் அதனை உணர்ந்து செயல்படும் மக்களும் அறிவாற்றலுடன் இருப்பதாலும்தான் நம் நாட்டில் நோயிகள் அதிகம் பரவாமல் இருக்கின்றன. இதனை உணர்ந்தவர்களுக்கு மட்டும் அதன் உண்மை, அர்த்தம்,, இன்பநிலை புரியும்..

மேற்கூறிய நிலையில் அரசு, ஆலம், வேம்பு மரங்கள் பருமன் பெரியதாக இருந்தும்சிறிய அளவில் காய்கனிகளைப் பெற்று முதிர்வடைந்த நேரத்தில் கிழே விழும்பொழுது மனிதர்கள் தலை,, உடலில் பட்டால் வலி தெரிவதில்லை. அதே நிலையில் பரங்கி பூசணியைப் போன்று பெரியளவில் காய்களைப பெற்று மக்கள் அன்பான அமைதிநிலையில் வலம்வரும்போது முதிர்வடைந்து விழுந்தால் மக்கள் நிலை என்னவாகும் யோசித்துபாருங்கள். அதுப்போல் பரங்கி பூசணிக்காய்கள், சுரக்காய்  நம் உடல்களில் உள்ள அசுத்தநீரை தூய்மை செய்யக்கூடிய ஆற்றலையுடையது அனால் அதன் காய்களோ எவ்வளவு  பருமனாக இருக்கின்றது அதன் கொடியப் பாருங்கள் இதுதான் இயற்கையின் படைப்பின் உண்மை..இந்த உண்மையில்தான் பலவிதமான அர்த்தங்கள் அடங்கியுள்ளன. அதன் உண்மையையும் அதன் அர்த்தத்தையும் உணரும்பொழுதான் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடங்கியுள்ளன.

இயற்கையின் செயல்பாட்டில் என்றுமே தர்மம், அர்த்தம், இன்பம் என்றுமே அழிவதில்லை எப்பொழுதும் வாய்மையே (தர்மம்) வெல்லும், இவையனைத்தும் இயற்கையின் கட்டளையால் முறையாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் நம் உலக செயல்பாட்டில் எந்தவித பேராபத்தும் ஏற்படாமல் இயங்கிகொண்டிருக்கின்றன.

இந்தியநாட்டின் தேசியமரம் ஆலமரமாகும்.   புத்தர் ஏசுபெருமான், மிகப்பெரியஞானிகள், மகான்கள்,, துறவிகள் இயற்கை காற்றினை சுவாசித்து சிந்தனை செய்து ஆன்மிக அறிவை பெற்று மெய்ஞான நிலையை அடைந்தவர்கள்தான் அதன்மூலமாகத்தான் உலகிற்கு அன்பு, அமைதி பரப்பினார்கள்.
_________________________________________________________________________________

ஒருவன் எந்தநிலையில் மெய்ஞானம் பெற்றாலும் இயற்கையின் விதிப்படிதான் அவன் வாழ்க்கை அமையும் இதில் எந்தவித ஏற்ற தாழ்வுகள் கிடையாது.
_____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக