மொத்தப் பக்கக்காட்சிகள்

நம் (பாரதம்) பூமி

அன்புடையீர்!

முதற்கண் உள்ளம் கனிந்த பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய நம் சர்வதேச சமுதாயத்தில் பொருளாதாரம்,விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த இன்றைய நிலைகளில் பலவித பிரச்சனைகளும், குழப்பங்களும் அதிகரித்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சரியான தீர்வுக்கிடைக்காதவரை எந்த ஓர் அரசும், அரசாங்கமும் முறையாக செயல்படாது.

அதனால் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞானம் முறையில் பலவித பிரச்சனைகளையும், குழப்பங்களையும் தீர்த்து அரசு, அரசாங்கமும் முறையாக செயல்படவும், மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனித நேயம் வளரவும் நம் சர்வதேச அளவில் அன்பு அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமாதானம் ஏற்படவும், சர்வதேச பணிகளில் முதன்மையான மேன்மையான பணியாகிய சமுதயாப்பணியை குறிப்பிட்டளவு விவரித்துள்ளேன். அதன்படி சமதருமம் நிறைந்த நிலையில் நம் சமுதாயத்தை வழி நடத்தி செல்வோம்.

முன்னுரை:
இன்றைய நிலையில் ஒவ்வொருவரும் உலகில் அமைதி, ஒற்றுமை, சமாதானம் வேண்டுமென்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்களே தவிர செயல்முறையில் செயல்படுத்தாமல் "பசுதோல் போர்த்திய பூலிபோன்று" தான் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் உண்மையிலையே அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமாதானத்தை விரும்பினால் நம் புவி அமைப்பில் ஜாதி, மத, இன, அரசியல் கலவரம் ஏற்படுமா? அணு ஆய்தம்கொண்டு போர்தான் நடைப்பெறுமா? இன்றைய காலக்கட்டத்தில் நம் சர்வதேச நாடுகளின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்துபாருங்க அமைதி, ஒற்றுமையான மகிழ்ச்சி சமதர்மம் நிறைந்த செயல்பாடுகள்தான் இருக்கிறதா? இதனையெல்லாம் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தன்னையும், இயற்கைநிலையையும் உணராமல் இந்திய ஆட்சி மற்றும் காவல் பணியை (IAS , IPS ) மேற்கொண்டாலும், அரசு, அரசாங்கநிலையில் பணிபுரிந்தாலும், தன்னார்வ அமைப்பின் மூலம் சமூக சேவை செய்தாலும், நீதி அமைப்பில் செயல்பட்டாலும், நம் சமூதாயத்தில் அன்பு, அமைதி, ஒற்றுமையையும் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது.

அதனால் எந்த துறையில் பணிபுரிந்தாலும் தன்னையும், இயற்கைநிலையையும் உணர்ந்து கண்ணியமாக கட்டுபாட்டு உணர்வுடன் தந்து கடமையை செய்தல் இயற்கையாகவே நமது நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்படும் ஏற்படுகொண்டே இருக்கும்.

நம் இந்திய தாய்திருநாடு ஜாதி, மதம் இனம் பேதமற்ற சமதர்மசமாதானம் நிறைந்த நாடாகவும், அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்த மிகப்பெரிய வல்லரசு நாடாக செயல்பட வேண்டுமென்பதற்காக உலக அமைப்பையும் அதன் செயல்பாட்டையும் குறிப்பிட்டளவு விவரித்துள்ளேன். அதைனை உணர்ந்து செயல்படுவோம். அதன்படி இளைய தலைமுறையினரை நம் இந்தியத் திருநாட்டின் வருங்காலத் தூண்களாக (தலைவர்களாக) உருவாக்குவோம்.






































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக