மொத்தப் பக்கக்காட்சிகள்

வலி(வாய்)மையே வெல்லும்

நம் உலக அமைப்பில் எந்த ஒரு செயலுக்கும் வலிமையான ஆற்றல் இருந்தால் அந்த செயலே நிலைப்பெறும் வெற்றிபெறும். நம்முடைய இயற்கைஅமைப்பில் ஒவ்வொரு ஜீவன்களும் தன் வாழ்நாட்களில் ஒவ்வொரு நிலையிலும் போராடித்தான் வாழ்ந்துகொண்டுவருகின்றன. அந்த போராட்டத்தில் வலிமையான செயல் எதுவோ அதுவே வெற்றுப்பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

 நம் சமுதாய நிலையில் சமூகத்தை (மக்களை) எடுத்துக்கொண்டால் மக்களின் செயல்பாடுகளே வெற்றிப்பெற்று நீடித்துகொண்டிருக்கின்றன. இந்த வெற்றியின் பயனாகத்தான் உலக இயக்கநிலை அமையும். நம் சமூகத்தில் ஒரு தனிமனிதனை எடுத்துக்கொண்டால் வாழ்க்கையே ஒரு போராட்டம் என்பதுபோல் அவன் வாழ்நாளில் போராடியே (முயற்சி செய்தே) மடிகிறான். அந்த முயற்சியில் வலிமையான செயல் இருந்தால் அந்த செயலே வெற்றிப்பெற்று அவனுடைய பெயர் நீடிக்கிறது.

(எ.கா) நமது முன்னோர்கள்

சமூக வாழ்க்கையில் மக்களிடையே இது சரி தவறு, இது இன்பம் துன்பம் எதுவென்றுத் தெரியாது. எதனை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம் பெரும்பான்மையான மக்கள் எதனை பின்பற்றுகிறார்களோ அதனையே ஒழுங்குபடுத்தி சமூக வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பயன்பாட்டை ஒழுங்குப்படுத்தி பயன்படுத்தும் முயற்சி (போராட்டம்) வலிமையாக இருந்தால் அதுவே வெற்றிப்பெறும்.

துண்டுபட்ட இந்தியாவை ஒழுங்குபடுத்தி தனது முயற்சியின் வலிமையால் ஒரே நிர்வாகத்தின் கிழ் கொண்டுவந்தனர் வெளிநாட்டினர். இதில் எந்தளவுக்கு வலிமைநிலை இருந்ததோ அந்தளவிற்கு நிர்வாகமும் நீடித்தன. அதன்பிறகு இந்திய மக்களிடையே இந்தியன் என்ற தேச உணர்வு பலரின் முயற்சியால் (போராட்டத்தால்) உருவாயின இந்த தேச உணர்ச்சியின் வலிமையால்தான் நாம் நாம் இந்தியர்கள் என்றுக் கூறிக்கொண்டு இருக்கிறோம்.

இன்றைய நிலையில் நம் இந்தியாவில் ஜாதி, மத, இன, மொழி, அரசியல், வேலைநிறுத்தம், நிர்வாக சிக்கல் போன்ற பிரச்சனைகள்தான் பெருகிவருகின்றன. இந்த பிரச்சனைகளின் மிகுதியாகத்தான் நம் நாட்டில் மட்டுமின்றி சரவதேசளவில் மக்களிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி இழந்து வாழும் நிலை ஏற்படுகிறது. இதற்கு அடிப்படையானக் காரணமே, ஊழல், லஞ்சம், அலட்சியப் போக்கான மேலாண்மை மற்றும் கண்காணிப்பு, பகுத்தறிவின்மை போன்றவை வலிமைப் பெற்று மிகுதியாக இருப்பதால்தான் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்தி வருகிறோம். இதனை தவிர்க்க நாம் யார்? எதற்காக? ஏன்? வாழ்கிறோம். நமது பணி என்ன? நம் வாழ்வில் இறுதியில் அடையும் பலன் என்ன? என்பதற்கான விடையை உறுதிசெய்துக் கொண்டு நம்மிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவவேண்டும் என்று நமது எண்ணத்தை வலிமையூட்டினால் நம் பூவியில் அமைதி நிலவும் நம்நாடு மிகப்பெரிய வல்லரசு நாடாகும்.

வாய்மையே வெல்லும் 

நம் பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவன்களும் தர்மத்தின் வழியில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதர்மத்தின் வழியில் வாழ்ந்தால் அழிவுத்தான் ஏற்படும்.
தர்மம் (உண்மை) என்பது நிரந்திரமான சூரிய ஒளியைப் போன்று எங்கும் பரவியிருப்பது. அதர்மம்-(பொய்) என்பது இயற்கை சூழ்நிலையால் அவ்வப்பொழுது சூரிய ஒளியை மறைக்கும் மேகம் போன்றது. சூரிய ஒளியை எந்த நிலையிலும் மறைக்க முடியாது. அதுப்போன்றுதான் உலகின் தர்மத்தை யாரும் அழிக்கவும் முடியாது. ஆக்கமும்டியாது  எப்பொழுதும் தர்மமே-வாய்மையே-சத்தியமே  வெல்லும் அப்படியிருக்கையில் நாம் எந்த துறையில் எந்தவிதமான பணி செய்தாலும் ஊழல், லஞ்சம் அலட்சியப்போக்கான நிர்வாகம் சுயநலம கலந்த மேலாண்மை போன்ற செயலை குறைத்து கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் "நாம்" என்ற உணர்வுடன் செயலாற்றினால்தான் நம் சர்வதேசளவில் அன்பு, அமைதி, ஒற்றுமை,மகிழ்ச்சி ஏற்படும்.  இதற்கு ஒவ்வொரு இந்தியரும் உதவிடவேண்டும்.

ஒன்றுப்படுவோம் பாடுப்படுவோம் 

நன்றி 

********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக