மொத்தப் பக்கக்காட்சிகள்

பொருளாதாரம்

இன்றையசமுதாய  அமைப்பில் சிறந்த வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் பணம், பொன், பொருள் அவசியம் தேவைப்படுகிறது. இந்த பொன்,பொருளுக்காக இன்றைய நிலையில் சாதாரண குடிமகன் முதல் உயர்ந்த பதவியில் இருக்கும் அரசு அரசாங்க அதிகாரிகள் வரை சிலரைத்தவிர நம் தர்மத்தையும் அரசு அமைப்பையும் தவறான முறையில் அதர்மவழியில் தன்சுயநலத்திற்காக வேலைவாய்ப்பை எற்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் இதனால் நம் சமுதாயத்தில் பல அமைப்புகளில் பலவித பிரச்சனைகளும் பொருளாதார சிக்கலும் எற்படுகிறது.

ஒரு நாட்டில் அன்பு அமை ஒற்றுமை ஏற்பட அந்நாட்டில் வாழும்  ஒவ்வொரு மனிதனும் மன நிறைவு அடையும் வகைகளில் பொருளாதார நிலை வேண்டியது அவசியமாகும்.

பொருளாதார நிலைஅரசுக் கட்டுப்பாட்டுடன் சீராக்கப்பட்டால் நம் நாட்டில் எற்படும், கொள்ளை, கொலை, விபச்சாரம்(எய்ட்ஸ்), கள்ளசந்தை இயற்கைவள பயன்பாட்டிற்கு மீஞ்சிய மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவை தடுக்கப்படும். இதனால் வீண் செலவுகளும் குறைக்கப்படும், குற்றங்களை தடுக்குமுறைகளை முறையாக கையாண்டால் பொருளாதார முன்னேற்றமட்டுமின்றி, நம் சமுதாய அமைப்பில் மனித நேயமும் வளரும். நம் சமுதாய அமைப்பில் பொருளாதார நிலை மேம்படவும் மனிதநேயம் புத்துயிர் பெறவும், கீழ்காணும் முறையை நன்கராய்ந்து சிறந்த நடவடிக்கை எடுக்கவும்.

1.  நிர்வாகத் தன்மை 

நம் சமுதாயத்தில் பொருளாதாரநிலையில் எற்றத்தாழ்வு ஏற்படுவதற்கு காரணம் சிறந்த நிர்வாத்தன்மை சரியில்லாமல் இருப்பதைதான் குறிக்கும். திறமையற்ற நிர்வாகத்தில், லஞ்சம், ஊழல், அலட்சியப்போக்கு விலைவாசி உயர்வு, போன்றவற்றால் எற்படும் பலப் பிரச்சனைகளால் அரசையும், அரசாங்கத்தையும், பொதுமக்கள் எந்தவித தீர்வையும் முறையாக எதிர்க்கொள்ளாமல் சமுதாய நிலையை சீர்க்குலைக்கும் தேவையற்ற போராட்டம், கடையடைப்பு, சாலைமறியல், போன்ற வன்முறைகலில் ஈடுபடுகிறார்கள் இதனால் நம் நாட்டின் பொருளாதாரத்தில், சிறந்த முழுமையான வளர்ச்சிகள் எற்படாமல் வீழ்ச்சிகள் எற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்துக் கொண்டே இருந்தால் நம் நாடு பொருளாதார நிலையில் பின்தங்கியே இருப்போம்,

அதனால் பொருளாதாரத்தில் தாழ்வுநிலை  ஏற்படாதவகையில் பணிப்புரிய சிறந்த நிர்வாகத்திறமையுள்ள லஞ்சம், ஊழல், அலட்சியம் செய்யும் எண்ணம் இல்லாத பொதுநலநோக்குடன் பணிப்புரியுக்கூடிய அதிகாரிகளையும் ஊழியர்களையும், உண்மையான நேர்மையான தேர்வுமுலம் நியமித்து பணிப்புரிய பரிந்துரை செய்யவேண்டும்.

பணிபுரியும்பொழுது சுயநலத்துடன் தவறான  முறையில் பணிபுரிந்தால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப உயர்ந்த நிலையில் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களுக்கு கொடியத்தண்டனை வழங்குவதுடன் அரசினால் பெற்ற அனைத்து சொத்துக்களையும் அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு வருடம் அல்லது 2 வருடம் காலங்களில் அவர்களின் சொத்து மதிப்பை கணக்கிடவேண்டும். இதனால் பின்வரும் அதிகாரிகள் தவறு செய்வது குறைக்கப்படும் நிர்வாகத்தன்மையும் சிறப்பு பெறும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகம் எற்படும்.

2. காவல் பணி

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது காவல்பணியும் ஒன்றாகும். இந்த காவல்பணிகளை சீரயமுறையில் தூய்மையான உண்மையான பொதுநலநோக்குடன் நிர்வகித்தால் பொருளாதார வளர்ச்சியில் எந்தவிதத்திலும் தாழ்வுநிலை எறபாடது.

காவல் பணிகளில் நேர்மையற்ற திறமையற்ற அரசாங்க உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் தலையிட்டு தங்களது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த அனுமதிக்ககூடாது.காவல் பணிகளில் சுயநோக்குடன் பணிப்புரிந்தாலும், பணிப்புரிய கட்டாயப்படுத்தினாலும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் எற்படாது. இதனால் தேச ஒற்றுமை, சமுதாய ஒற்றுமை, அமைதி சீரழியும், 

அதனால் தேச உணர்வும், சமுதாய அமைப்பில் அன்பு, அமைதி, ஒற்றுமை ஏற்படவும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கவும், காவல் பணிகள் சிறப்பாக செயல்படவேண்டி மத்திய மாநில அரசு சட்டதிட்டத்தின்படி நீதிமன்றங்களின் பார்வையில் காவல்பணிகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும், காவல் பணியாளர்கள் சட்டத்திற்கு முரணாக சிறு தவறு செய்தாலும் கொடிய தண்டனையுடன் பணி நீக்கம் செய்யவேண்டும்.

3. கல்வி பணி

பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச சமுதாய ஒற்றுமை வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிப்பது கல்வி பணியும் ஒன்றாகும். கல்வி வளர்ச்சியைப் பொறுத்தே பொருளாதார முன்னேற்ற நிலையும், சமுதாய ஒற்றுமை நிலையும் அமையும். கல்வி நிலையில் பிர்ச்சனைகள் ஏற்படாமல் கல்விநிலையை உயர்த்த அதற்குரியா அதிகார்கள் எதிர்கால மாணக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்திட்டம் தயாரித்து செயல்பட செய்யவேண்டும்.

நம் நாட்டின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கல்வி மற்றும் காவல்பணிக்கு ஒதுக்கப்படுவதுப் பற்றி ஏழை எளிய மக்களுக்கு தெர்வதில்லை ஆனால் அந்த பணிகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை (குறைபாடுகளை) தெளிவாக தெரிந்துள்ளார்கள். இதனால் காவல்பணி மீதும் கல்விபணிமீதும் நம்பிக்கை இல்லாமல் ஏழை எளிய மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு இருகண்கள் எவ்வளவு அவசியமோ அதுபோன்று ஒரு நாட்டிற்கும் காவல் மற்றும் கல்வி என்ற இரு கண்கள் அவசியமாகிறது. நம் நாட்டின் இருகண்களாக இருக்கும் அமைப்புகள் உண்மையாக நேர்மையாக தர்மவழியில் செயல்பட்டால், பொருளாதாரத்தில் மட்டுமின்றி நம் சமுதாய அமைப்பிலும் முன்னேற்றம் அதிகம் ஏற்படும்.

ஆனால் இன்றைய நிலையை சற்று சிந்தித்து பாருங்கள்.
அ. பொதுநூலகங்கள் பராமரிப்பு
நம் நாட்டில் பெரும்பாலோனோர் முறையான கல்வி பெறமுடியாமல் தவறான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார்கள்  இதனால் நாட்டில் சட்ட ஒழுங்கு, பொருளாதாரம், சமூகப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.
வசதியுள்ள மக்கள் மற்றும் மாணக்கர்கள்  நூல்களை பணம் கொடுத்து வாங்கிப்படிக்கிறார்கள். ஏழை எளியோர் கல்வி அறிவையும், பொது அறிவையும் பெறமுடியாமல் தவிக்கிறார்கள்.
அடிப்படையிலையே ஏழ்மை நிலையில் எவரொருவர் கல்வி அறிவையையும் பொதுஅறிவையும் பெறுகிறாரோ அவர்களால் சமுதாயத்தில் நன்மை உருவாகும். 
அதன்படி நாட்டில் பொருளாதாரம், மக்கள் தொகை, சட்ட ஒழுங்கு, இனம், மொழி, ஜாதி, மதம், பிரச்சனைகள் குறையவும். இதனால் ஏற்படும் வீண் செலவுகளைக் குறைக்கவும், கிராமம் வட்டம், பேரூராட்சி, மாவட்டங்களில் நூலகங்களை முறையாக செயல்படுத்தவேண்டும்.
நூலகத்துறைக்கு செலவிடப்படும் செலவு எதிர்க்கால இந்தியாவை தன்னிறைவு நிறைந்த வல்லரசு நாடக்க உதவும் 
நூலகங்கள கணிபொறிமயமாக்கப்பட்டாலும் சாலச் சிறந்ததே.  

4. மக்கள் தொகை  

நம் நாட்டில் பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் விழ்ச்சி ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று மக்கள் தொகை செயல்பாடும் ஒன்றாகும். இயற்கைவளங்களின் பயன்பாட்டிற்கு தகுந்தால்போல் மக்கள் தொகை இருந்தால் எந்தவித பிரச்சனைகளும் அதிகரிக்காது.

இயற்கைவளங்களின் பராமரிப்பு குறைவாக இருந்து மக்கள் தொகை அதிகரித்தால் எந்தவிதத்திலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது. அதனால் இயற்கைவளங்களை ஊக்கப்படுத்தவேண்டும்.
5. வறுமைநிலை 
நம் நாட்டில் பொருளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது வறுமைநிலையும் ஒன்றாகும். நம் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சிறந்த அறிஞர்கள் மூலம் சிறந்த சட்டத்திட்டங்கள் உருவாக்கபடுகிறது ஆனால் உருவாக்கப்பட்ட சட்டத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் இருப்பதாலும். அதிலிலும் ஊழல் நடைபெறும்பொழுதும் நம் நாடு வறுமை நிறைந்த அதாவது கடன் நிறைந்த நாடாக் இருக்கிறது.
பொருளாதாரத் திட்டங்கள் சரியாக உருவாக்கப்பட்டு முறையாக செயல்படவில்லை என்றால் நம் நாட்டில் வறுமைநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
இந்த வறுமை நிலையில் மக்கள் நீதி தவறி நெறிகெட்ட முறையில் கொலை, கொள்ளை, விபச்சாரம், கள்ளச்சந்தை, லஞ்சம், ஊழல் போன்ற நிலையில் வாழ்கிறார்கள். இதன் நிலை நீடித்தால் தவறான முறையில் வாழ்க்கையை அமைத்துகொள்வார்கள்.

இன்றைய நிலையில் சுயநலவாதிகள் அதாவது நாட்டுப்பற்று என்ற போர்வையை போர்த்திக் கொண்டுவாழும் சமுதாயத்தின் பெரும்புள்ளிகள் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறார்கள். அத்துடன் ஏழை பணக்காரர்கள் என்றப் பிரிவையும் ஏற்படுத்துகிறார்கள். இந்தபிரிவினையால்தான் ஏழைகளின் வாழ்க்கை அவர்களின் எண்ணங்களின்படி தவறான முறையில் அமைகிறது. இந்த சூழ்நிலைகளில் ஏழைகளின் வறுமைநிலையை செல்வந்தர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தவறான முறையில் தனது வசதிவாய்ப்புகளை உயர்த்திகொள்கிறார்கள். இதற்கு தகுந்தாற்போல் அரசின் சட்டதிட்டங்களை அரசு ஊழியர்களும், அரசியல்வாதிகளும், செல்வந்தர்களுக்கு சாதகமாக அமைத்து தருகிறார்கள். இதுபோன்று சாதகமான நிலை நீடித்தாலும், நம் நாட்டில் ஏழ்மைநிலை ஒழிக்கப்படவில்லை என்றாலும் நம் சமுதாய அமைப்பில் தொடர்ந்து இனக்கலவரம், கொள்ளை, கொலை, கள்ளச்சந்தை, விபச்சாரம் (எய்ட்ஸ்) போன்ற தீவிரவாத செயல்கள் தொடர்ந்தக் கொண்டே இருக்கும், இதனால் நம்முடைய பொருளாதார நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாது.வறுமையை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அ. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் நிலை

நம் நாட்டில் இன்றைய நிலவரப்படி பொருளாதார அடிப்படையில் ஒரு தனி நபருக்கு சாதாரண நிலையில் உயிர்வாழ ஒரு நாளைக்கு ரூ.150/- தேவைப்படுகிறது. வறுமைநிலையில் வாழும் ஒரு குடும்பத்தில் மூன்று நபர்கள் இருந்தால், அவர்களின் நுகர்வுக்கென்று குறைந்த மதிப்பாக சாதாரண நிலையில் ரூ. 300/- தேவைப்படுகிறது. இதில் ஒரு நபர் மட்டும் கூலிவேலை செய்யும்பொழுது அன்றைய தினக்கூலி ரூ. 350/- கிடைக்கும். இந்த ரூ.350/- யைக் கொண்டுத்தான் அன்றைய தின வாழ்க்கையை நடத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். இவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து வேலைக்குச் சென்று கூலிபெற இயலவில்லை என்றால் அவர்களது வாழ்க்கை நிலையை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

நம் நாட்டில் பெரும்பாலோனோர் விவசாயத்தையும் கட்டிடம் கட்டும் தொழிலையும் நம்பி வாழ்கிறார்கள் இதில் விவசாயம் மற்றும் கட்டிடம் செய்யும் குடும்பத்தினர்க்கு தொடர்ந்து வேலை கிடைப்பது இல்லை. இந்த நிலையில் அவர்களுடைய வாழ்க்கை நிலையை யோசித்து பாருங்கள.

ஆ. மது, மாது, சூது நிலையில் மக்கள் வாழ்க்கை நிலை

இன்றைய அரசாங்க அமைப்புகள் மத்திய மாநில அரசை பொருளாதார அடிப்படையில் நிர்வகிக்க வருமானம் பெறவேண்டி மக்களுக்கும், நாட்டிற்கும் ஒவ்வாத சில தொழில்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் மதுபான உற்பத்திதொழிலும் ஒன்றாகும். 
மது, மாது, சூது, இந்த மூன்றும் ஒரு மனிதனை மட்டும் அல்ல வீட்டையும், நாட்டையும், நம் சமுதாயத்தையே சீரழிக்கும் தீயசக்திகளாகும். இந்த தீய சக்திகளை அரசுக்கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
வறுமைநிலையில் வாழும் பெரும்பாலான ஆண்கள் (பெண்களும்) கடின உடல் உழைப்பால் ஒரு  நாளைக்கு குறிப்பிட்ட தொகையை ஊதியமாக பெறுகிறார்கள். இந்த வருமானத்தில் அரைப் பகுதியை மது அருந்துவதிலும்,  புகைப்பிடிப்பதிலும், சூதாடுவதிலும் செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள். மீதமுள்ள பணத்தைக் கொண்டுதான் அன்றையக் குடும்பநிலையை நிர்வகிக்கவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் குடும்பத்தில் பலவித பிரச்சனைகள் உருவாகி  குடும்ப தகராறு ஏற்படுகிறது.

வறுமையில் வாழும் குடும்பத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு வேலைக்கிடைக்காத சமயத்திலும் இயற்கை சீற்றங்களாலும், விலைவாசி உயர்வாலும், வேலையில்லாத சமயத்திலும் வருமானம் இல்லாததால் மது, மாது, சூதுவுக்கு அடிமையானவர்கள் வீட்டிலுள்ள பொருள்களை அடகு வைத்தோ அல்லது விற்றோ தனது அடிமைநிலையை சரிசெய்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் குடும்பம் வயிற்றுக்கே உணவு இல்லாமல் துன்பப்பட்டு துயரப்பட்டு வறுமையில் வாழும் நிலை ஏற்படுகிறது. இந்த வறுமைநிலையை  உருவாக்குவது யார்? அரசா? அரசாங்கமா? அல்லது மக்களாகவேவா ? நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம் முன்னோர்கள் மதுவை ஒழிப்பதிலும் சூதாட்டத்தை தவிர்ப்பதிலும் அரும்பாடுபட்டார்கள். ஆனால் இன்றைய மனிதர்களோ மதுஉற்பத்தியை அதிகரிப்பதிலும் சூதாட்டம் செய்வதிலும் முழுக் கவணம் செலுத்திவருகிறார்கள்.இதனை அரசாங்கம் ஒரு தொழிலாகவே நடத்திவருகிறது.  இன்று ஆண்களுக்கு  இணையாக மது அருந்துவதிலும் போட்டிபோடுகிறார்கள்.

பெரும்பாலான குடும்பங்கள் வறுமைநிலையில் வாழும்பொழுது படிக்கவேண்டிய வயதில் குழந்தைகள், இருந்தாலும், திருமண வயதில் ஆணோ, பெண்ணோ, இருந்தாலும் அவர்களின் எதிர்க்கால நலனை எண்ணிப்பாருங்கள் ஏழைகளுக்குஉதவ சட்டதிட்டம் இருந்தாலும் அவைகள் சரியாக அவர்களிடம் சென்று சேருவதில்லை.

இ. வறுமையிலும் பொருளாதார முன்னேற்றம்.

வறுமையில் வாழும் பல குடும்பங்களில் குழந்தைகளை படிக்க வைக்கவோ உணவளித்து காப்பாற்றவோ முடியாத சூழ்நிலையில் பல பெற்றோர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் இளம்வயதில் படிப்பதை நிறுத்திவிட்டும் சிலர் தொடர்ந்து படித்துக் கொண்டும் தன் பெற்றோர்களையும் தன்னையும் காப்பற்றிகொள்ளவேண்டி சுகமாகவும்,கவலையற்றநிலையில் வாழவேண்டிய வயதில் கூலி வேலை செய்து வாழ்ந்துவருகிறார்கள்.

தன் நலத்திற்காகவும், தன்  பெற்றோர்களின் மகிழ்சிக்காகவும் வாழும் குழந்தைகள் இளைஞர் பருவமடைந்தவுடன் சமுதாய நிலையை காணும்பொழுது சமுதாய வளர்ச்சிக்கும், அதன் நலனிற்கும் தன வாழ்க்கையையே தியாகம் செய்து சிறப்பான முறையில் வாழ்ந்துவந்தார்கள் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள். என்றும் வாழ்வார்கள் அதனால்தான் நம் சமுதாயம் சிறப்பாகவும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் அடைந்துகொண்டிருக்கிறோம்.

ஈ. வறுமையில் பொருளாதார தாழ்வு 

வறுமையில் வாழும் பல குடும்பங்களில் உள்ள  குழந்தைகள் தன் பெற்றோர்களின் தவறான செய்கையால்தான் வயிற்ருக்கு உணவு இல்லாமல் திருடர்களாக அலையும் நிலை ஏற்படுகிறது. உணவு கிடைக்காமல் இருக்கும்பொழுதும் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய சூழ்நிலைகளில் இதுதான் சரி, தவறு என்று அறியாத வயதில் சிறுசிறு தவறான வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள். பிறகு இளையபருவமடைந்தவுடன் தாம் செய்யும் வேலை தவறு என்று உணரும்பொழுது பலர் தனது தவற்றை திருத்தி வாழ்கிறார்கள்.

சில இளைஞர்கள் தாம் செய்யும் தொழில் தவறானது என்று உணர்ந்தாலும் தனது தவறு நியாயமானதென்று நியாயபடுத்திகொண்டும் வாழ்கிறார்கள். இதுபோன்று இதுபோன்று வாழும் இளைஞர்களால்தான் நம் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது இளைஞர்களுடைய தவறு இல்லை. இளைஞர்கள் தவறு செய்வதற்கு தூண்டும் தவறான முறையில் செயல்படும் அரசும், அவ்வப்பொழுது அமையும் அரசாங்கமே இதற்கு முழுக் காரணமாகும்.

இதனால் இன்றைய நம் சமுதாய அமைப்பில் சட்டதிட்டங்களை "மீறி பசுத்தோல் போர்த்திய புலிப்போன்று" வாழும் நம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சமுதாய அமைப்பில் தவறான வழியில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்கள் போன்றவர்களின் சுயநலத்திற்காக நெறிதவறி வாழும் நம் இளைஞர்களின்  வாழ்க்கையை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு சமூக விரோத செயல்களாகிய கொள்ளை, கொலை, விபச்சாரம், மது உற்பத்தி மற்றும் விற்பனை, புகைப்பது, சூதாடுவது போன்ற செயல்களை செய்துவருகிறார்கள். 

நாளடைவில் இளைஞர்கள் தானாகவே சுயஉணர்வுடன் சமூகவிரோத செயல்களை செய்கிறார்கள் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நம் சமுதாயத்தில் பெரும்பிரச்சனைகள் ஏற்பட்டு அமைதி ஒற்றுமை இல்லாமல் நம் சமுதாயம் சீரழிகிறது. 
நம் சமுதாயமும், பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்க சமூகசேவை செய்யும் இளைய சமுதாயத்தினரை ஊக்குவிக்கவேண்டும். அப்பொழுது அமைதி, ஒற்றுமை, சகோதரதன்மையுடன் தேச உணர்வும், பொருளாதார முன்னேற்றமும் உறுதியாக ஏற்படும்.

2. புற்று மற்றும் காசநோய் உற்பத்தி 

இயற்கைவளம் பொருந்திய நம் நாட்டில் இன்றைய நிலையில் 90 சதவிகிதத்தினர் பலவித நோய்களால் அவதிப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றில் புற்று மற்றும் காசநோய் உள்ளவர்கள் அதிகமாக உள்ளார்கள். இனிவரும் காலங்களில் மட்டும் 90% புற்று மற்றும் காசநோயால் அவதிபடுவார்கள்.

புகைப்பிடிப்பதினாலும், மது அருந்துவதாலும் மட்டும் புற்று, காசநோய் வருவதில்லை, உயிரற்ற நச்சுத்தன்மையுள்ள அதாவது மாசுடைந்த காற்றை சுவாசிக்கும்பொழுதும், அசுத்த நீரை பருகும்பொழுதும் உடலுறுப்புகள் செல்கள் பாதிக்கப்பட்டு புற்று, காசநோய் ஏற்படுகிறது.

3. மனிதர்களின் தப்பு கணக்கு 

 இன்றைய மனிதர்கள் இயற்கை தன்மையும் தன்னையும் உணராமல் நான், எனது என்ற தவறான கர்வம் நிறைந்த நிலையில் சுகபோக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தன்னைத்தானே அழித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதனால் நம் புவியில் கட்டுப்படுத்தமுடியாத நோ(பொ)ய்கள் அதிகரித்துகொண்டிருக்கின்றன. இதனால் புவியில் உயிரினம் அனைத்தும் அழியும் நிலை கூடிய விரைவில் ஏற்படும்.

மனித இனம் ஞானம் விஞ்ஞானத்தை முறையாக பயன்படுத்தி சிறந்த நெறிமுறையுடன் வாழாமல் தர்மத்தை அழித்து (உண்மையை) அதர்மத்துடன் வாழ்ந்தால் தர்மைத்தை நிலை நிறுத்த அதர்மத்தை அழிக்கும் பொருட்டு நம் புவியில் கூடிய விரைவில் பெருமாற்றம் ஏற்படும். (அழியும் நிலை ஏற்படும்).

ஊ. நோய்களை கட்டுப்படுத்தி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட 

  1. நம் நாட்டின் கண்கள் பெண்களே, பெண்கள் நலமாக இருந்தால் நம் நாடு நலமாகவே இருக்கும். நோய்களை கட்டுப்படுத்தவும், பொருளாதார நிலை முன்னேற செய்யவும், அனைத்து நிலை பெண்களுக்கும் பொறுமை நிறைந்த அன்பு குணம் ஏற்படும் வகையில் குடும்பக் கல்வி அனைவர்க்கும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும்.
  2. அனைத்து நிலை மாணக்கர்களுக்கும் 12-ஆம் வகுப்புவரை கட்டாயமாக சமுதாய ஒற்றுமை தேச உணர்வை விளக்கும் வகையில் இலவசமாக பாடம் கற்பிக்கப்படவேண்டும்.
  3. நம் நாடு பொருளாதாரத்தில்  முன்னேற்றம் ஏற்படவும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு ஆக்கப்பணிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்குரியப் பணிகளில் பணிப்புரிய பணிவான குணத்துடன் அன்பு வழியில் பெண்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவேண்டும்.
  4. மக்களிடையே நோய்கள் பரவாமல் தடுக்க வருடத்திற்கு ஒருமுறை அனைத்து நிலை மக்களுக்கும் வீடுதோறும் சென்று இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இதன்மூலம் பலவித நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படலாம். மேலும் அரசு, தனியார்த் தனியார்துறைகளில் பணியில் சேரும்பொழுதும் பணிபுரியும்பொழுதும் இரத்தபரிசோதனை சான்றிதழ் பெறவேண்டும். இந்த சான்றிதழ் இரத்ததானம் செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
  5. எய்ட்ஸ் நோய் பெரும்பாலும் தவறான எண்ணங்களில் வாழும் மனிதர்களிடமிருந்துதான் காணப்படுகிறது. இதில் அவர்களுடைய தவறு எதுமில்லை. அரசும், அவ்வப்பொழுது அமையும் அரசாங்கமும்  பொறுப்பற்ற நிலையில் செயல்படுவதுதான் காரணமாகும்.

எ. வறுமையை போக்கி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட

நம் நாட்டில் வறுமையை போக்க அவ்வப்பொழுது அமையும் அரசாங்கம் அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்ப பலவகை சட்டத்திட்டங்களை உருவாக்கிவருகிறது. இந்த சட்டதிட்டங்களை அனைத்து துறை அரசின் உயர் அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும் முறையாக நேர்மையாக ஊழல் இல்லாமல் தேச உணர்வுடன் பணி செய்தாலும், பணி  செய்ய ஊக்குவித்தாலும் நம் நாட்டில் வறுமைநிலை ஒழிந்து மனித நேயம் மலர்ந்து பொருளாதாரத்தில் நிலையான முறையான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

நம் சமுதாயத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ வாழவேண்டுமென்று பிறப்பதில்லை நம் சமுதாய சூழ்நிலையில் ஏற்படும்  பிரச்சனைகளின் அடிப்படையிலையே அவர்களின் வாழ்க்கைநிலை அமைகிறது. அவ்வாறு அமைவதில் மது, மாது, சூதுவிற்கு அடிமையாகி வாழும்நிலையும், வறுமை நிலையில் வாழும் வாழ்க்கைநிலையும் ஒன்றாகும்.

அதனால் சமுதாய நிலையில் ஏற்படும் பிரச்சனைகளை களைந்து சமுதாய அமைப்பை நல்வழிப்படுத்துவது அரசு, மற்றும் அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.

நம் சமுதாயத்தையும் அரசு அரசாங்கத்தையும் நல்வழிபடுத்துவதும் காப்பதும் நீதி மற்றும் காவல் அமைப்பின் தலையாயக் கடமையாகும்.
நம் சமுதாயம் சிறப்போடு இருக்க அரசு உயர் ஊழியர்களும் அரசாங்க உறுப்பினர்களும் நீதி, காவல் அமைப்பினரும் உண்மையை காக்கும் நிலையில் அதாவது தர்மத்தை காக்கும் நிலையில் பணி செய்யவேண்டும்.

ஏ. இயற்கைவளங்கள் பராமரிப்பு

பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மிகவும் துணைப்புரிவது இயற்கை வளங்களாகும். இயற்கைவளங்களை பெருமைப்படுத்த துணைப்புரிவது இயற்கை செல்வங்களாக இருக்கும்  நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகும்.

ஆனால் இன்றோ விஞ்ஞான வளர்ச்சி என்றப் பெயரால் தவறான செய்கையால் இயற்கைவளங்களை சீரழித்துவருகிறோம். இந்த சீரழிவால் அதிகம் அழிவது இயற்கை அல்ல நாம் அனைவரும்தான் (மனிதர்கள்தான்)

அதனால் நம்மளை நாமே காத்துக்கொள்ள இயற்கை வளங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்கும் முறையினை ஒவ்வொரு மனிதனும் தெரிந்திருக்க செய்ய வேண்டும் அப்படி செய்தால் மனித வாழ்வில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும், நம்மிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, நிச்சயம் ஏற்படும்.

ஐ. சமுதாயநிலை 

சமுதாய பயன்பாட்டிற்கு அத்தியாவசியப் பொருள்கள் அவசியம் தேவைபடுகிறது. சமுதாயநிலை விரிவடைய பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படவேண்டும்.

ஆனால் இன்றைய நிலையில் நம் சமுதாயத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல், ஆத்திகம், நாத்திகம், போன்றவைகள் என்றால் என்ன? என்ற உண்மைநிலை தெரியாமல் அதனுள் பலப் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டும் பலப் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள். இதே நிலையில் நம் மக்கள் வாழ்ந்தால் நாம் பொருளாதாரநிலையிலும் மற்ற நாடுகளைவிட பின்தங்கிய நிலையில்தான் இருப்போம். இதனால் நம் நாடு என்றைக்குமே ஏழை நாடாக அதாவது கடன்நிறைந்த நாடாக இருக்கவேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும்.

அதனால் நம் நாடு மற்றநாடுகளைவிட பொருளாதாரத்துறையில் மட்டுமின்றி அன்பு, அமைதி, ஒற்றுமை, வழிகளில் மருத்துவம்,விஞ்ஞானம், பொறியியல், வேளாண்மை போன்ற துறைகளில் முன்னோடியாக விளங்க நம்மிடையே எந்தநிலையிலும் மனித நேயம் வளரவேண்டும் (மனிதவளம் மேம்படவேண்டும்).

நம்மிடையே மனித நேயம் (அன்பு, அமைதி, ஒற்றுமை, சமாதானம்) வளர முட்டுகட்டையாக இருப்பது ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் நிலைதான். இவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்காமல் வாழும்பொழுதுதான் நம் நாட்டில் பல நிலைகளில் பலவித பிரச்சனைகள் உருவாகி கலவரம் ஏற்படுகிறது. இதனால்தான் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தடை ஏற்படுகிறது. 

இத்தடைகளை தகர்த்து மற்றநாடுகளைவிட அனைத்து நிலைகளிலும் முன்னோடியாக விளங்க ஜாதி, மதம், இனம், அரசியல் என்றால் என்ன என்பவைகளைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். அதனை நன்கு ஆராயிந்து அதற்கு தகுந்தாற்போல் சட்டத்திட்டங்களை நவீனப்படுத்தி முழுப் பொறுப்பையும் ஏற்று நம் நாட்டை சிறப்புற செய்யவும். இதனால் நம் நாடு அமைதி நிறைந்த மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும்.

கீழ்காணும் ஜாதி, மதம், அரசியல் அமைப்பினை குறிப்பாக நீதிபதிகள், குடியரசுத்தலைவர் மாநில ஆளுநர்கள், இந்திய ஆட்சிப் பணியாளர்கள், இந்தியக் காவல் பணியாளர்கள் (IAS, IPS) முறையாக தூய்மையாக உணர்ந்து, சட்டத்திட்டங்களை நவீனப்படுத்தி மக்களிடையே மனித நேயத்தை உருவாக்கினால் நம் நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழும்.

அ . ஜாதி, இனம் அமைப்பு 

ஜாதி, இனம்  எனபது மனித இனத்தின் வாழ்வுநிலையில் அவர்கள் செய்து வந்த பணிதான் ஜாதி, என்றுப் பெயர் பெற்று பிரிக்கப்பட்டது. இந்த ஜாதிநிலையில் உயர்ந்த, தாழ்ந்த என்றநிலை எதுவும் இன்றுவரை கிடையாது. இனிவரும் காலங்களிலும் உருவாகாது. அதே சமயத்தில் மனிதர்கள் செய்துவந்த பணியில் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் பொருளாதாரநிலையில் அவர்களின் வாழ்க்கை நிலை அமைந்தன.

இதில் அதிக வருமானம் பெற்றவர்கள் நிறைவான வசதிகளையும் முறையான சுத்தமான உணவுகளையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர் இவர்கள் பெற்ற வருமானத்தின் அடைப்படையில் ஏற்படுத்திக்கொண்ட வசதியாலும் சுத்தமுள்ள ஊட்டசத்து நிறைந்த உணவுப் பொருள்களின் நுகர்ச்சியாலும் நெறிமுறையான வாழ்க்கை முறையாலும் அவர்கள் அவர்களாகவே சமுதாயத்தில் தனித்து வாழும் நிலையை ஏற்படுத்திகொண்டார்கள். இதனால் இவர்களது எண்ணங்கள் அதிகாரநிலையை அடைந்து நாளைடைவில் சமுதாயத்திலும் பொருளாதார அடிப்படையிலும் உயர்ந்தோர் என்றுப் பிரித்துக்கொண்டு வாழ்ந்தனர்.

மற்றோருநிலையில் நிறைந்த வருமானம் பெற்றவர்கள் இருப்பதற்கு சுகாதாரமான இடமின்றியும், உண்ண முறையான உணவுமின்றியும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுமின்றியும் வாழ்ந்தனர். இதனால் கிடைத்த இடத்தில் குடியை அமைத்துக்கொண்டு கிடைத்த வேலை செய்துக்கொண்டு வாழ்ந்தனர். இவர்கள் இவர்கள்மேல் நம்பிக்கை இல்லாமலும் வாழ்ந்தனர். இதனால் இவர்களது எண்ணங்கள் தாழ்வுநிலையை அடைந்தன. இதுவே நாளடைவில் சமுதாயத்தில் பொருளாதார அடிப்படையில் தாழ்ந்தவர் என்று பிரித்து ஒதுக்கப்பட்டார்கள்.

இதுபோன்ற பிரிவினைக்குக் காரணம் தூய்மையான உடை அணியாததாலும், சுகாதாரமற்ற உணவு உண்பதாலும், வாழ்வதாலும் தூய்மையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் பேசுவதாலும் இவர்களது எண்ணங்கள் தாழ்வுநிலையான செய்கையை செய்யத்தூண்டுவதாலும் தாழ்த்தப்பட்டோர் என்று ஒதுக்கப்பட்டார்கள். 

  • ஜாதி, இனக் கலவரம் உருவாகுதல்

மேலும் மேலும்  பலப் பிரிவினைகளை ஏற்படுத்திகொள்கிறார்கள். இந்த ஜாதி, இனப்  பிரிவினைகள்தான் இன்றைய மனிதர்களிடையே மூடர்களால் அதிக பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி ஜாதி இனக் கலவரம் என்று உருவாக்கப்படுகிறது.

இந்த ஜாதி, இனக்கலவரம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் மனிதர்களுடைய மனம். மனித இனம் ஒன்றுப்படாமல்  வேறுபடும்பொழுதும், அரசு ஒதுக்கீடு என்று பிரிக்கும்பொழுதும் சமூக அமைப்பில் கலவரம் ஏற்படுகிறது. இதுபோன்ற ஜாதி, இனக்கலவரத்தாலும், ஜாதி, இன அமைப்பிற்கு வழங்கப்படும் சலுகைகளாலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் சமுதாய ஒற்றுமையிலும் அதிகளவில்  தடைஏற்படும்.

அதனால் ஜாதி, இனக்கலவரத்தை தடுத்து, பொருளாதார நிலையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட வருமானத்தின் அடிப்படையில் மக்களுக்கு வசதிகள் செய்து சலுகைகள் வழங்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு சத்துள்ள உணவுகள் கிடைக்கவும், முறையான மருத்துவ வசதி செய்து தரவேண்டும். சிறந்த வசதிவாய்ப்புகளை செய்துக்கொடுத்து சிறப்பாகவும் நேர்மையாகவும் கண்காணிக்க வேண்டும். (இன்றயநிலையில் முறைகேடுகள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன இவை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்).
எந்த உடலைப்பெற்ற உயிரனமாக இருந்தாலும் அந்த உயிரனம் வசிக்கும் இடத்திற்கும், சுவாசிக்கும் காற்றுக்கும் உண்ணும் உணவிற்கும், உடலுறுப்புகளின் அசைவிற்கும், மண்ணின் தன்மைக்கும் ஏற்ப அதனதன் வாழ்க்கை நிலை அமையும் இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது. இதில் விளங்கினமாகிய மனிதர்களிடையேயும் எந்தவித ஜாதி, இனம், மதம் வேறுப்பாடும் கிடையாது.

இதில் கூறப்பட்ட அமைப்புகளை உணர்ந்து மனரீதியாக ஜாதி, இன, மதக் கலவரத்தை உருவாக்கினார்கள் என்றால் சமுதாயத்தில் பொறுத்தளவில் சமூக விரோதியாகவும், தேசத்தை பொறுத்தளவில் தேசதூரோகியாகவும். உலகத்தைப் பொறுத்தளவில் அரக்ககுணம்படைத்த அசூரர்களாகவும் ஆவார்கள்.
எந்த நிலையிலும் ஜாதி, இன, மத வளர்ச்சிக்காக பிரச்சாரம் செய்பவர்கள் உலக உயிரனங்களை துன்புறுத்தி வாழும் அரக்க குணம்படைத்த அசூரர்களே  ஆவார்கள் 
நன்மைகள் நடைபெறவேண்டும் என்றால் நல்லதையே நினைத்து நல்லதையே செய்யவேண்டும். நகரத்திலும் கிராமத்திலும் வாழும் மாடுகளின் நடவடிக்கையை ஒப்பிட்டுப்பாருங்கள் மாடு என்ற சொல் ஒன்றுதான். அதன் செயல்பாடு வெவ்வேறாகத்தான் இருக்கும்.

ஆ. மத அமைப்பு

மதம் என்பதற்கு தர்மத்தில் சிறந்த வழி என்றுதான் பொருள் ஆகும். இன்னும் சற்று தெளிவுப்படுத்தினால் மனம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்து மதம் என்றப் பெயர்  என்றுப் பெயர் பெற்றது. மனமிருந்தால் மார்க்கம் (வழி) உண்டு என்ற சொல்லின் பொருள் இதுதான். மனம் எப்பொழுதும் ஒரு நிலையில் செயல்படாது. அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்றும் குறிப்பிட்டனர். 

நேரத்திற்கு தகுந்தாற்போல் சுயநலத்திற்கேற்றவாறு மனம் செயல்படுவதால் மனதிற்கு சமயம் என்றும் கூறப்படுகிறது. 

(மனம் - சமயம் = மதம் - சிறந்த வழி என்று பொருள்ப்படும்)

ஆ 1. மதங்கள் உருவாக்கம் 

மனித இனத்தின் ஆரம்பக்காலத்திலும் இன்றயக்காலகட்டத்திலும் இயற்கையின் கால் சூழ்நிலைகளின் மாற்றத்தால் உருவ அமைப்புகள்  வேறுபட்டு செ(ய)ல்களின் செய்கையால் உணர்வுநிலையாகிய சிந்திக்கும்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த உணர்வுநிலையாகிய  சிந்திக்கும்நிலையே  நாளடைவில் ஞானம் பெற்றது அதாவது அறியும்நிலை உருவானது. சிந்திக்கும் செ(ய)ல்களின் உருவான ஞானத்தை அடிப்படையாகக்கொண்டுதான் மனிதர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு வழி வகுக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட வழிமுறைகள் மதங்களாக அழைக்கப்படுகின்றன. இவை விஞ்ஞான ரீதியாகவும் செயல்படுத்தப்படுகின்றன.

நம் முன்னோர்கள் மக்களின்மீது அக்கரைக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்தவும் நம் சமுதாயம் நலம் பெறவும் உலகம் சிறப்பாக இயக்கப்படுவதற்காகவுந்தான் அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் வழங்கிய அறிவுரைகளை மதமாகவோ, சமயமாகவோ உருவாக்கவில்லை. அவ்வாறு குறிப்பிட்ட அறிவுரைகளை தனித்துதான் பின்பற்றபடவேண்டுமென்றும் குறிப்பிடவில்லை. உலக இன்பத்துன்பங்களை எடுத்துகூறி தர்மத்தை உணர்த்தினார்கள் அதாவது உண்மையை உணர்ந்தார்கள்.

        ஆனால் இன்றோ நம் ,முன்னோர்கள் கூறிய அறிவுரைகளின் உண்மையை (தர்மத்தை) புரிந்துக்கொள்ளாமலும் அதன்படி வாழ்க்கை நடத்தப்படாமலும் மனத்தெளிவு இல்லாமல் சுயநோக்கத்தில் கர்வம் நிறைந்த நிலையில் இவர்களாகவே சில அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டும் நம் சமுதாய அமைப்பையே சீரழித்து வருகிறார்கள். சமுதாய சீரழிவு ஏற்படுவதற்கு தகுந்தாற்போல் நம் அரசியல் சாசனமும் இருக்கிறது.

    நம் சமுதாய சீரழிவை எந்த ஒரு சட்டமும் அனுமதிப்பதில்லை அனுமதிக்காது அனுமதிக்கவும் கூடாது.

ஆ 2. மதக் கலவரம் ஏற்படுதல்.

          இப்புவியில் உருவான ஒவ்வொரு உயிரனங்களும் இயற்கையின் விதியின் செயல்படிதான் வாழ்க்கை நடந்துக்கொண்டேயிருக்கின்றன. இதில் மனித இனமும் அப்படிதான் வாழ்கின்றன. ஆனால் ,மற்ற உயிரினங்களைவிட மனித உயிரினத்திற்கு மட்டும் இயற்கை சூழ்ச்சியால் பலவகையான ஆக்கச் சக்திகளையும் அழிக்கும் சக்திகளையும் ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. இதனை சிறந்த அறிஞர்கள் சற்று தெளிவானமுறையில் சிந்திக்கவேண்டும்.

 ஆனால் மனிதர்களோ அவற்றையெல்லாம் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை மட்டுமின்றி சர்வதேச சமுதாயத்தையே தவறான விஞ்ஞான நிலையிலும் அரசியல்நிலையாலும் மதப்பிரச்சாரங்களாலும் பலவித பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    இன்றைய நவீன சமுதாயத்திலும் மதத்தைப்பற்றிய உண்மைநிலை தெரியாமல் இருக்கும்மதவாதிகள் சர்வதேச சமுதாய அமைப்பிலும் மதக்கலவரம் மட்டுமின்றி மதச்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் உருவாக்கிக்கொண்டே வருகிறார்கள்.

மதத்தை பின்பற்றுபவர்களாகக் கூறிக்கொண்டு வாழும் மதவாதிகள் உலகத்தைப் பற்றிய சிறந்த மனத்தெளிவு (அறிவுத்தேர்ச்சி) இல்லாமல் மதத்தை வளர்ப்பதற்காக பிற மதங்கள் மீது வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டு மக்களிடையே சிறந்த பழக்கவழக்கங்கள் இல்லாமல் அறம், பொருள், இன்பமாகிய தர்மம், அர்த்தம், மகிழ்ச்சி இல்லாமல் வாழ்கிறார்கள். கட்டாயபடுத்தி வாழவும்  செய்கிறார்கள் செய்விக்கிறார்கள்.

        இதனால் மக்களிடையே பண்பாடு வளர்வதற்குப் பதிலாக வெறித்தனந்தான் வளர்கிறது. இதுதான் மதக்கலவரமாக உருவாகிறது. மதக்கலவரம் ஏற்படுவதற்கு முதற்காரணமான குற்றவாளிகள் அரசியல் அறிவுயில்லாத அரசியல்வாதிகளும், மக்களின் தேவைகளை உணராதா அரசாங்க அமைச்சர்களும் அவார்கள்.

ஆ 3. மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க.

மனிதர்களிடையே மன (மத) ஒற்றுமை இல்லாததால்தான் நம் சர்வதேச சமுதாய அமைப்பிலும் இனம்புரியாத மதக்கலவரம் ஏற்படுகிறது. மனிதனை மனிதனாக வாழவைக்கத்தான் மன ஒருமைப்பாட்டுடன் வழிமுறைகளாகிய மதம் உருவாக்கப்பட்டன.

மன ஒருமைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட  மதம் மனிதனை மனிதர்களாக வாழவைக்காமல் மிருகமாக மாற்றும்பொழுதும் அரசு தனது பணிகளை சிறப்பாக செய்ய தடை ஏற்படும்பொழுதும் மக்களிடையே அன்பு, அமைதி, ஒற்றுமை, இல்லாமல் வாழும்பொழுதும் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடை உருவாகும்பொழுதும் நம் சமுதாயம் காக்க தவறான செயல்களை செய்துவரும் (அறிவுக்குப் புறம்பான மதத்தை [வழிகளை] பரப்பி வரும்) எந்த ஒரு மத அமைப்புகளையும் அரசியல் சட்டப்பிரிவின்படி நாட்டின் நலனுக்காகவும் சமுதாய ஒற்றுமைக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கட்டாயமாக (இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவி 19, 25 ன்படி கட்டுட்படுத்தவேண்டும்.) ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.

நம் சமுதாயம் நலம்பெற வேண்டுமென்றால் மதகொள்கைகளை பின்வற்றுவதுடன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வகுத்தளித்த வாவுறை வாழ்த்தாம் திருக்குறள் எனும் பொதுமைறையின் கருத்துகளை பின்பற்றினால் சமுதாயம் நலம் பெறும்.

கட்டாய மதமாற்றத்தடை
கட்டாய மதமாற்றத்திற்கு தடைவிதித்தாலும் மதக்கலவரத்தை தடுக்கமுடியாது, மதக்கலவரத்தை தடுக்க தேச உணர்வை ஊட்டும் வகையிலும் சமுதாய நலனை காக்கும் வகையிலும் நம் நாடு முழுவதும் ஒரேக் கல்விக்கொள்கையை கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசியல் சட்டப்பிரிவி 30யை  முற்றிலும் அகற்றப்படவேண்டும்.

ஜாதி, மத,இனக்கலவரம் உருவாவதற்கு இந்திய அரசியல் சட்டமும் வழிவகை செய்கிறது

இ. அரசியல் பணி (அரசாங்கப் பணி)

அறிவியல் பணிப் போன்றுதான் அரசியல் பணியும், ஆனால் இன்று அரசியல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத சூழ்நிலை உருவாக்கிக் கொண்டே வருகின்றனர். மக்களை நல்வழிப்படுத்தி காப்பதற்காகத்தான் சட்டதிட்டம் உருவாக்கப்படுகிறது. சட்டதிட்டத்தின்படி மக்களை காக்கத்தான் காவல்துறை பணிப்புரிகிறது.

சிறந்த சட்டதிட்டங்களை முறையாக செயல்படுத்தி மக்களையும் காவல் பணியையும் சிறப்பாக கண்காணித்து நிர்வகித்து வருவதுதான் அரசியல் பணியாகும். இதன் அமைப்பால்தான் நம் நாடு விஞ்ஞானத் துறையிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் சிறந்த சட்டதிட்டங்களையும் அதன்படி செயல்படும் மக்களையும், இவற்றை  காத்துவரும் காவல் பணியும், இவையனைத்தையும் நிர்வகிக்கும் அனைத்திற்கும் மேலான எந்தவித தவறுமில்லாமல் செயல்படும் அரசியல் பணியும்தான் ஆகும்.

ஆனால் இன்றய நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள் அரசியல் நிலைகளில் எத்தனைவிதமான தீர்க்கமுடியாத குழப்பங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அரசியல் சட்டதிட்டம் சரியாக செயல்படாமல் இருப்பதாலும் அதில் சில குறைபாடுகள் இருப்பதாலும்தான் நம் நாட்டில் ஜாதி, இன, மத, அரசியல் கலவரம் ஏற்படுகிறது. இதனால் தொழில் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றம் இல்லாமல் பொருளாதார நிலையிலும் நம் நாடு பின்தங்கியே இருக்கிறது.

இன்றைய நம் மக்கள் அரசியல் சட்டத்திட்டங்களை நன்றாகப் புரிந்துக்கொள்ளாமல் அவற்றை தவறாக பயன்படுத்தி வாழ்வதோடு மட்டுமின்றி நம் சமுதாயத்தையே சீரழிக்கிறார்கள்.

நம் நாட்டில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே சில அமைப்புகள் உருவாக்கபட்டன. இவை நாளடைவில் கட்சிகளாக செயல்பட்டு அரசியலை நிர்வகித்தனர். ஆனால் இன்றோ அரசியலின் தன்மையைப் புரிந்துக்கொள்ளாமலும் அரசை நிர்வகிக்கத் தகுதியில்லாமலும் பல கட்சிகள் உருவாகிக்கொண்டே வருகின்றன.

{சிறந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு தன்னுடைய  பொருள்களையும், சுகபோக வாழ்க்கையையும் இழந்தார்கள். ஆனால் இன்று மக்களை வரிப்பணத்தை சுரண்டி சுகபோகவாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்}

சில் ட்சிள் 

நம் நாடு சுதந்திரம் அடைந்து குடியுரிமை (அரசியல் சாசனம்) பெற்றப்பிறகு இன்றைய நிலையில் எத்தனைக் கட்சிகள் உருவாகியுள்ளன?  இன்றைய மனிதர்கள் ஜாதி மத, இனத்திற்கு ஒரு கட்சியும், ஆளுக்கொரு கட்சியுந்தான் உருவாக்கிக்கொண்டே வருகிறார்கள். இதுப்போன்ற கட்சிகளை உருவாக்குவதால் நம் நாட்டில் வறுமையை ஒழித்தார்களா? ஜாதி, மத, இன, மொழி, கலவரம் ஏற்படாமல் அன்பு, அமைதி, ஒற்றுமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்களா? அரசு மற்றும் அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற உதவி செய்கிறார்களா? பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சேவைத்தான் செய்கிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    இன்றைய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் சுநோக்குடன் செயல்படுவதால்தான் நம் நாட்டில்  ஜாதி, மத, இன, மொழிக் கலவரம் அரசியல் குழப்பங்களும் ஏற்படுகிறது. இதன்நிலை நீடித்தால் நம்நாடு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் (கடனாளியாக இருக்கும்) சூழ்நிலைதான் ஏற்படும்.

    அதனால் பொதுமக்களுக்கும் அரசு அமைப்பிற்கும் நட்புறவு ஏற்படவும், சமுதாய நிலையில் அன்பு, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் நிலவவும் நம்நாட்டில் செயல்பட்டுவரும் சமூக விரோத அமைப்புகளையும், ஜாதி, மதக் கட்சிகளையும் முற்றிலும் அகற்றப்படவேண்டும்.

அரசியலில் எந்த குழப்பமும் இல்லாமல் செயல்பட்டால் நம்நாடு சர்வதேச அளவில் அன்பு, அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமாதானம் நிறைந்த மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும்.

சட்டம் 

சமுதாய நிலையை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்தி மக்கள் வாழ்க்கையில் நலம் பெறவே சட்டத்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. அதனால்தான் அரசியல் அமைப்பு சட்டவிதி 14ல் சட்டத்தின்முன் அனைவரும் சமமாகக் கருதப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமென்று குறிப்பிடுகிறது.

ஆனால் இன்றயநிலையில் செயல்படும் சட்டம் சிலந்தி வலையைப்போன்று செயல்பட்டுவருகிறது. இதில் ஏழை, எளிய வறுமையில் வாழும் மக்கள் இயற்கையின் சூழ்நிலையாலும் தன்னை அறியாமலும் ஏதாவது ஒரு நிலையில் சிறு தவறு செய்துவிட்டால் சிறுப்பூச்சிகள் சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு அவதிப்படுவதைப்போல் சட்டத்தின் பிடியில் பல மக்கள் துன்பப்பட்டுக்கொண்டு வாழ்ந்துவருகிறார்கள் இதுபோன்ற நிலையில் வாழ்வதால்தான் நம் சமூகம் அதிகளவில் பாதிக்கிறது.


    சட்டநிலையில் மற்றொன்று அதிகார அமைப்பிலும், பணம்,  ஆள் படை (அடியாள்கள்) அமைப்பிலும் வாழும் மக்கள் தன்னையறிந்தும், தன்னையறியாமலும்  எந்தவித தவறு செய்தாலும், சிலந்தி வலையில் பெரிய பூச்சிகள் மாட்டிக்கொண்டால் தன்  உடல் பலத்தாலும், முயற்சியாலும், வலையில் அறுத்துக்கொண்டு சென்று விடுவதுப்போல் சட்டத்தின் பிடியில் அவர்கள் தன்னுடைய அதிகாரம், பணம், ஆள் படைப்பலத்தாலும் சட்டதிட்டத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு சுகமாக வாழ்கிறார்கள். இதுபோன்ற நிலையில் வாழ்வதால்தான் நம் சமுதாயத்தில் ஒற்றுமை, இல்லாமல் ஏற்றத்தாழ்வுநிலை ஏற்படுகிறது.


    சமூக சேவை என்பது எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் செய்யும் சேவைதான் தூய்மையான சமூக சேவையாகும். இன்று சிலந்தி வலையைப் போன்று இருக்கும் சட்டத்தால் தூய்மையாக உண்மையாக சமூக சேவை செய்யும் சேவகர்களும் பாதிக்கிறார்கள். இதனால் நன்மை இல்லாமல் எந்தவிதத்திலும் சமூக சேவை செய்ய முன்வருவதில்லை.

    அதனால் பொருளாதாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் நாட்டில் அன்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி ஏற்பட சட்டத்திட்டங்களை முறையாக உருவாக்கப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படவேண்டும். சமூக சேவை செய்யும் சேவர்களுக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு 

        பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும்பிரச்சனையாக இருப்பது வேலையின்மையும் ஒன்றாகும். நம் நாட்டில் படித்த இளைஞர்கள் படிப்பிற்குரிய வேலையில்லாமல் அவதிப்படுவதைப் பார்த்து பெரும்பாலான இளைஞர்கள் முறையான கல்வி அறிவைப் பெறாமல் வயிற்று உணவிற்காக அவர்களுக்கு பிடித்த கிடைத்த வேலையை செய்து வருகிறார்கள் . இதனால் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எந்தவித (ஏற்றத்தாழ்வுமில்லை) பயனுமில்லை.

அதனால் தொழில் நுட்பத்துறையில் வேலைவாயிப்பினை அதிகம் ஏற்படுத்தி தரவேண்டும் கிராமப்புற மக்களுக்கு முறையான வேலைவாய்ப்பினை அரசுத்திட்டபடி செய்துகொடுத்து ஊழலில்லாமல் சிறப்பாக கண்காணிக்கவேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்புத்திட்டதின் கீழ் எந்தவித குறுக்கீடுமில்லாமல் உதவி செய்து பொருளாதார நிலையில் முன்னேறவேண்டும் செய்யவேண்டும்.
அரசுப் பணிகளில் பணிப்புரியும் நபர்களில் குடும்பத்திற்கு ஒரு நபர் என்ற முறையில் பணிபுரிய செய்யவேண்டும் (உயர்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலையிலுள்ள வாயிற்காவலர் வரை) இதனால் வேலைவாய்ப்பும் வருமானமும் பரவலாக்கப்படும் தேசிய வருமானம் அதிகரிக்கும்.
நம் சமுதாய அமைப்பில் வேலையின்மை பெரும்பிரச்சனையாக இருந்தால் கொள்ளை,கொலை, விபச்சாரம் தீவிரவாதம் போன்ற தேசதுரோகவேலைகள் அதிகரிக்கும். இதனால் நம் சமுதாயம் சீர்கெடும். இந்தநிலையில் நம் நாட்டில் தீவிரவாதிகள் (ஜாதிமதத்தளைவர்கள், எதனையும் புரிந்துக்கொள்ளாமல் செயல்படும் அரசியல்வாதிகள், இவர்கள் சொல்படிநடக்கும் சுயநலவாதிகள்) வெகுவிரைவாக அன்பையும், அமைதியையும், ஒற்றுமையையும் சீரழிப்பார்கள்.

அதனால் நம் சமுதாயத்தையும் நம் நாட்டையும் காக்க படித்த மற்றும் ஏழ்மையில் வாழும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புத்திட்டதின் கீழ் வேலை அளித்தும் மற்றும் கடன் உதவி செய்து சுயத்தொழில் செய்யவும் அவற்றை முறையாக கண்காணித்தும் வழிவகை செய்யவேண்டும். நம் இளைஞர்களின் சுயமுயற்சியால் நம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.

வேளாண்மை

உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு என்ற நுகர்வுப்பொருள் அவசியமானது ஒன்றாகும். இதில் மற்ற உயிரினங்களைவிட மனித உயிரினம் மட்டும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து உண்ணும் அளவிற்கு பகுத்தறிவைப் பெற்றுள்ளன. நம் சமுதாய அமைப்பில் நுகர்வுப் பொருள் உற்பத்திச் செய்யும் விவசாயப் பணி (வேளாண்மை) இல்லையென்றால் மிருகங்களைவிட மோசமான நிலையில்தான் நமது வாழ்க்கை அமையும்.  ஆனால் இன்றைய நிலையில் விவசாயப் பணிகள் நசுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டில் வறுமை, பசி, பட்டினி, நோய்கள் போன்றவைகள் உருவாகும்நிலை உற்பத்தித் தன்மையைக் குறைப்பதாலும், உற்பத்தியாகும் நிலத்தை குறைப்பதாலும் ஏற்படும். இன்றைய நிலையில் மக்கள் பெருக்கத்தின் காரணமாக குடியிருப்புக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்காக வசதிபடைத்தவர்கள் விளைநிலங்களை வலைக்கு வாங்கி வீட்டு மனைப்பிரிவாக விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் உணவு உற்பத்திக்கு விளைச்சல் நிலம் பற்றாக்குறை ஏற்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ற உணவு இல்லை என்றால் நம் சமுதாயம் சீர்கெடும். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் (பசி வந்தால் மானம், குலம், கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, காமம் ஆகிய பத்தும் பறந்துவிடும்!) என்பதற்கேற்ப உணவுகிடைக்காமல் வாழ்ந்தார்கள் என்றால் நற்குணம் இல்லாமல் மிருக வாழ்க்கையை போன்று வாழும் நிலைதான் ஏற்படும்.

அதனால் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மனிதவளத்தை மேம்படுத்தவும் வேளாண்மைத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து அயல்நாட்டு வருமானத்தை பெற்று பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், சமுதாயம் நலம் பெறவும் செய்யவேண்டும். மேலும் விளைச்சல்நிலங்களை பள்ளி, கல்லுரி, மற்றும் வீடு கட்டுவதற்கு மனையாக போடுவதற்குப் பதிலாக தரிசு நிலங்களையும் விளைச்சலுக்கு பயன்படாத நிலங்களையும் வீடு, பள்ளி, கல்லுரி கட்டுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். விவசாயத்திற்கு இரசாயன உரங்களைவிட இயற்கை உரங்களே சாலச்சிறந்தது. இதனால் மனித உள்ளமும் உடலும் நலமாக இருக்கும் மண்ணின் தன்மையும் காக்கப்படும். இதனை வேளாண்மைத் துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.  வேள் + ஆண்மை = உணவு உற்பத்தி. நாம் உணவு உற்பத்தியை அதிகரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் அதிக பொருளாதார நிறைவு ஏற்படும்.

போக்குவரத்து

பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு வகிப்பது போக்குவரத்தும் ஒன்றாகும். போக்குவரத்து சிறப்பாக செயல்பட சாலைகள் வசதியும் பராமரிப்பும் முறையாக இருக்க வேண்டும். ஆனால் இன்றோ எதுவும் சரியில்லாத நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் உடனடியாக சாலைகளை சீர்செய்து முறையாக பராமரிக்கவேண்டும் அதிக பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

கீழ்வருவனவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

விஞ்ஞான நிலையிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணியர்களை அளவுக்கு அதிகமாக நெரிச்சலுடன்  ஏற்றிசெல்கிறார்கள். இது நாகரிகத்திற்கு ஏற்றச்செயல் இல்லை. இவை தொடர்ந்து நடைப்பெற்றால் மனரீதியாக பயணியர்கள் மனம் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தினால் பயணியர்களுக்கே தெரியாமல் உடல்நிலை பாதிக்கப்படும். மேலும் அரசு வாகனம் அடிக்கடி இடைப்பட்டத் தூரத்தில் பழுதுடைந்து விடுகிறது. இதனால் பயணியர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போக இயலவில்லை மன அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. இதனை மனரீதியாக அரசுத்துறை சிந்திக்கவேண்டும்.

சரக்கு வாகனம் அதன் விதிமுறைகளை முறையாக கையாண்டால் வழக்குகளும், பொருளாதாரம் சிக்கலும் அதிகம் ஏற்படாது. ஓட்டுநர் பயிற்சி அளிக்கும்பொழுது நம் நாடு என்ற உணர்வுடன் சாலை விதிகளை பின்பற்றும்படியும், நாட்டிற்கும் வீட்டிற்கும் சிறந்த குடிமகனாக இருக்கும்படியும் சிறந்த பயிற்சி அளித்து உரிமம் வழங்கினால் நன்று. இதனால் போக்குவரத்து பிரச்சனை ஏற்படாது. நன்கு சிந்தித்து நடவடிக்கை எடுத்தால் நன்மைகள் பல உண்டு.

கருத்துகள் இல்லை: